நாம் கடந்த வாரம் திங்கள் அன்றிலிருந்தே நிப்டி 7900 என்ற நிலையை அடையும் என்று உறுதியாக சொல்லியிருந்தோம்.
அதற்காக தான் கடந்த புதன் அன்று 7900 கால் ஆப்சனையும் வியாழன்று
8000 கால் ஆப்சனையும் வாங்கிவைத்திருந்தோம்.
நம்மிடம் பரிந்துரை வாங்குபவர்களையும் வாங்க சொல்லியிருந்தோம்.
இன்று காலை அனைத்து கால் ஆப்சன்களையும் விற்றுவிடவேண்டும்.
அதனால் இரண்டு நாட்களாக தினவர்த்த்கம் செய்யவில்லை.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் சுமார் 1 சதவீதம் உயர்ந்து முடிந்துள்ளது.
அதனையொட்டி ஆசிய சந்தைகளும் உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது இன்று 40 புள்ளிகள் உயர்வில் ஓப்பன் ஆகும்.
இன்று மதியம் பிராபிட் புக்கிங் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இன்று நிப்டி 7905 என்ற நிலையில் ஓப்பனாகி 7944 என்ற புதிய உச்ச நிலையை அடையும் என எதிர்பார்க்கிறேன்.
நிப்டி சப்போர்ட் 7844
நிப்டி ரெசிடென்ஷ் 7905,7944
இந்த வாரம் முழுவதும் முக்கிய இந்திய டேடாக்கள் எதுவும் இல்லை.
ஆனால் இன்று அமெரிக்காவின் கோர் இன்ப்லேசன் டேடா வெளிவர உள்ளது.