** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 17 May 2015

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 454
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு 
இனத்துள தாகும் அறிவு.
 உரை:
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.
Translation:
Man's wisdom seems the offspring of his mind; 
'Tis outcome of companionship we find.
Explanation:
Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.


அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல் களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரை வில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதப்பேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல் படலாம்.