** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 9 May 2017

09/052017... செவ்வாய்....... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் வர்த்தகநாளான (மே 8-ம் தேதி) உயர்வுடன் ஆரம்பமாகி, உயர்வுடனே முடிந்தன.ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் இருந்தது, ரூபாயின் மதிப்பு உயர்ந்தது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் நாள் முழுக்க உயர்வுடன் முடிந்தன
நேற்றைய நிப்டி 28 புள்ளிகள்  உயர்வுடன்     9134 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 5 புள்ளிகள் உயர்வுடன்    நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்   வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன்    9344 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
காலாண்டு முடிவுகள்: ஏ.சி.சி., நிறு­வனத்தின் வருவாய் ரூ.3,663 கோடி.
ஏ.சி.சி., நிறு­வனம், சிமென்ட் உற்­பத்தி மற்றும் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், கடந்த மார்ச்­சுடன் முடி­வ­டைந்த காலாண்டில், 211.06 கோடி ரூபாயை, ஒட்­டு­மொத்த நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 231.70 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் மொத்த செயல்­பாட்டு வருவாய், 3,323.17 கோடி ரூபாயில் இருந்து, 3,663.18 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இந்­நி­று­வ­னத்தின் சிமென்ட் உற்­பத்தி, 3.77 சத­வீதம் அதி­க­ரித்து, 63.60 லட்சம் டன்னில் இருந்து, 66 லட்சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது. 
இந்­நி­று­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி நீரஜ் ஆகோரி கூறு­கையில், ‘‘எங்கள் நிறு­வனம், கடந்த நிதி­யாண்டில், இரு புதிய தயா­ரிப்­பு­களை அறி­முகம் செய்­தது. ஆலையின் உற்­பத்தித் திறனை அதி­க­ரிக்க, முத­லீடு செய்­யப்­பட உள்­ளது. இதன் மூலம், நிறு­வ­னத்தின் விற்­பனை அதி­க­ரிக்கும்,’’ என்றார்
ஹெச்டிஎப்சி வங்கி லாபம் 18 சதவீதம் உயர்வு.
ஹெச்டிஎப்சி வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 18.2 சதவீதம் உயர்ந்து ரூ.3,990 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.3,374 கோடியாக இருந்தது. வங்கியின் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.662 கோடியில் இருந்து ரூ.1,261 கோடியாக அதிகரித்திருக்கிறது.
நான்காம் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.21,560 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.18,862 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.14,549 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டின் நிகர லாபத்தை விட இது 18.3 சதவீதம் அதிகமாகும்.
இந்த காலாண்டில் வங்கியில் இருந்து 4,000 பணியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர் அதனால் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 84,325 ஆக குறைந்திருக்கிறது. டிசம்பர் காலாண்டிலும் 5,000 பணியாளர்கள் வெளியேறினார்கள். வங்கியில் இருந்து வெளியேறுவோர் விகிதம் 21 சதவீதமாக இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் அதிகபட்சமாக 95,002 பணியாளர்கள் இருந்தனர்.
கடந்த நிதி ஆண்டுக்கான டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 11 ரூபாய் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் 9.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்பட் டது. கடந்த நிதி ஆண்டில் 195 கிளை கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய நிதி ஆண்டுகளில் 300 முதல் 400 கிளை கள் வரை தொடங்கப்பட்டுள்ளன. வரும் காலங்களிலும் இதே அள விலே புதிய கிளைகள் தொடங்கப் படும் என அறிவிக்கப்பட்டிருக் கிறது.
தற்போது 4,715 கிளைகளும், 12,260 ஏடிஎம்களும் செயல்பட்டு வருகின்றன. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.05 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
சென்­னை­யைச் சேர்ந்த, ஸ்ரீராம் சிட்டி யூனி­யன் பைனான்ஸ் நிறு­வ­னம், நிதிச் சேவை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னத்­தின் நிகர லாபம், 2016 – 17ம் நிதி­யாண்­டில், 5 சத­வீ­தம் அதி­க­ரித்து, 556 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்­டில், 530 கோடி ரூபா­யாக இருந்­தது.இதே காலத்­தில், இதன் செயல்­பாட்டு வரு­வாய், 15.6 சத­வீ­தம் உயர்ந்து, 4,432 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. நிகர வட்டி வரு­வாய், 18.2 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 2,897 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.நிர்­வ­கிக்­கும் சொத்­து­களின் மதிப்பு, 18.2 சத­வீ­தம் அதி­க­ரித்து, 23,132 கோடி ரூபா­யாக ஏற்­றம் கண்­டுள்­ளது. கடந்த மார்ச்­சு­டன் முடிந்த நான்­கா­வது காலாண்­டில், இந்­நி­று­வ­னத்­தின் நிகர லாபம், 78 சத­வீ­தம் குறைந்து, 12 கோடி ரூபா­யாக உள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்­டின் இதே காலாண்­டில், 55 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், செயல்­பாட்டு வரு­வாய், 13.5 சத­வீ­தம் உயர்ந்து, 1,107 கோடி ரூபா­யா­க­வும், அளிக்­கப்­பட்ட கடன்­கள், 5,223 கோடி ரூபா­யில் இருந்து, 6,245 கோடி ரூபா­யா­க­வும் உயர்ந்­துள்ளன.
நிப்டி சப்போர்ட் 9295,9275
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9336,9355
9 may details
divident
------
bonus
----
results
bhartiartl
bluestar
denabank
frl
gmdc
petronet
vijayabank
trident
syndibank
throcare

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 139000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1154
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் 
தேறியார்க்கு உண்டோ தவறு.
 உரை: 
பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?.
Translation: 
To trust henceforth is hard, if ever he depart, 
E'en he, who knows his promise and my breaking heart.
Explanation: 
As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.

Image result for thannambikkai