6/4/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டன, சென்செக்ஸ் 516 புள்ளிகளும், நிப்டி 156 புள்ளிகளும் சரிந்தன.
ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் நடந்ததால் அதன்மீதான எதிர்பார்ப்பில் வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பமாகின. குறிப்பாக வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற கருத்து நிலவியது. எதிர்பார்த்தது போலவே குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்தது.
ஆனபோதும் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர். குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகள் அதிகளவு சரிந்தன. இதன்காரணமாக இன்றைய வர்த்தகம் முடியும்போது பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தது
நேற்றைய நிப்டி 155 புள்ளிகள் சரிந்து 7603 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 133 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 7643 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7550,7500
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7640,7700,7740
வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், கடந்த, 2015 ஜனவரி முதல் தற்போது வரை, 1.50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதில், வங்கிகள் ஏற்கனவே, 0.25 – 0.50 சதவீதம் வரை, வட்டியை குறைத்துள்ளன. தற்போதுள்ள பொருளாதார சூழலில், வட்டி குறைப்பு அவசியமாகஉள்ளது. போதிய அளவு பருவமழை பெய்ய தவறினால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம், 7.6 சதவீத வளர்ச்சி இலக்கை எட்டுவது சிரமம். வங்கிகள், வாராக் கடனை குறைக்க எடுத்து வரும் நடவடிக்கை, மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியர்கள், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பது தொடர்பான, ‘பனாமா பேப்பர்ஸ்’ விவகாரம் குறித்து விசாரிக்க, மத்திய அரசு அமைத்துள்ள குழுவில், ரிசர்வ் வங்கியும் இடம் பெற்றுள்ளது. தேர்தல் நேரத்தில், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிப்பது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டதை விட, 50 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம் புழங்கும் என, தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
நிதி கொள்கை அறிவிப்பு :* ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு தரும் கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது* ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் பெறும் கடனுக்கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி, 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது* வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய, 4 சதவீத ரொக்க இருப்பு விகிதத்தில் மாற்றமில்லை* ரிசர்வ் வங்கியிடம், வங்கிகள் தினமும் பராமரிக்க வேண்டிய ரொக்க இருப்பு, 5 சதவீதம் குறைக்கப்பட்டு, 90 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது * வெளிச்சந்தை ஊக்குவிப்பு திட்டத்தில், நடப்பு வாரம், 15 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் விடப்படும் * வங்கிகள், அரசு கடன் பத்திரங்கள் மூலம் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி, 0.75 சதவீதம் குறைக்கப்பட்டு, 7 சதவீதமாக நிர்ணயம்* எம்.சி.எல்.ஆர்., முறையில், வங்கிகள், செலவினங்களுக்கு ஏற்ப, அவ்வப்போது வட்டியை நிர்ணயிக்க உள்ளது, வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும்* 7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவது, பணவீக்கத்தில், 1.5 சதவீதம் வரை தாக்கத்தை ஏற்படுத்தும்* மொத்த வர்த்தகம் மற்றும் நீண்ட கால நிதி சேவைகளுக்கான, காப்பு வங்கிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது* அடுத்த நிதி கொள்கை, வரும், ஜூன் 7ம் தேதி வெளியாகும்.
6 apr DETAILS
divident
colgate
kpit tech
hind zinc
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 81000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM