25/09/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 157 புள்ளிகள் சரிவுடன் 9964 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 9 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 9994 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
டாடா ஸ்டீல் நிறுவனமும் தைஸென்குருப் நிறுவனமும் ஐரோப்பிய நாடுகளில் செயல்படுத்தும் உருக்கு ஆலைகளை இணைக்க முடிவு செய்துள்ளன. இரண்டு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு புதிய நிறுவனத்தில் இரு நிறுவனங்களும் சம பங்குகளை கொண்டி ருக்கும்.
டாடா ஸ்டீல் லிமிடெட் மற்றும் தைஸென்குருப் ஏஜி நிறுவனங்கள் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிறுவனம் உருக்கு தகடுகளை இப்பிராந்தியத்தில் விற்பனை செய்யும். ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஆண்டுக்கு 2 கோடி டன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். இரு நிறுவனங்களையும் இணைப்பது தொடர்பாக ஓராண்டுக்கும் மேலாக பேச்சு நடைபெற்று வந்தது
தேசிய பங்குச் சந்தை குறியீடான, நிப்டி, கடந்த வாரம் ஆரம்பத்தில், உயர்வில் துவங்கி, செவ்வாயன்று புதிய வரலாற்று உச்சமான, 10,178 புள்ளிகளை அடைந்தது. இருப்பினும், இந்த உயர்வு நிலைத்து நிற்கவில்லை. அடுத்த நான்கு நாட்களிலும் சரிவைச் சந்தித்து, 226 புள்ளிகள் குறைந்து, 9952 என்ற குறைந்த அளவை எட்டியது.கடந்த வாரம் போலவே, ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலும், சந்தை இது போன்ற ஒரு சரிவைச் சந்தித்தது. அப்போது, 9,685 புள்ளிகள் வரை சரிந்தது. அதன் பின் ஏற்பட்ட உயர்வுதான், வரலாற்று உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது.இந்த வாரத்தைப் பொறுத்தவரை, பெரிய பொருளாதார காரணிகள் எதுவும் வெளிவரப் போவதில்லை. வரும் வியாழன் அன்று, எப்.அண்டு ஓ, செட்டில்மென்ட் மற்றும், வெள்ளியன்று நிப்டி இண்டெக்ஸ் மாற்றி அமைக்கப்பட இருப்பது ஆகியவை தான் முக்கியமானவை.ஏ.சி.சி., பேங்க் ஆப் பரோடா, டாடா பவர், டாடா மோட்டார்ஸ் டி.வி.ஆர்., போன்றவற்றை நீக்கி, புதிதாக, பஜாஜ் பைனான்ஸ், எச்.பி.சி.எல்., யு.பி.எல்., ஆகியவை சேர்க்கப்பட உள்ளன. இந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது, அடுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நீக்கப்படும் பங்குகள் விலை குறைந்தும், புதிதாக சேர்க்கப்படும் பங்குகள், விலை உயர்ந்தும் காணப்படும்.மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழிற்துறை வளர்ச்சி ஆகியவை குறைந்துள்ள சூழலில், அரசு ஊக்குவிப்புத் தொகை வழங்க வாய்ப்பிருக்கிறது. ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு கொடுத்த ஈவுத்தொகை குறைவாகும். மேலும், இந்த நிதியாண்டின், முதல் நான்கு மாத நிதிப் பற்றாக்குறையானது, மத்திய அரசின் மொத்த பட்ஜெட் தொகையின், 90 சதவீதம் ஆகும். மேலும் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு, உயர் பண மதிப்பு நீக்கம் போன்றவை பொருளாதார சரிவை ஏற்படுத்தி உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.தற்போது பங்குச் சந்தை வளர்சியானது, அதிக பரிவர்த்தனை காரணமாகத்தான் உயர்ந்து வருகிறதே தவிர, பொருளாதார வளர்ச்சி காரணமாக இல்லை என்ற கருத்தும் இருக்கிறது. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதி முதலீட்டு நிறுவனங்கள் போன்றவை தான் மிக அதிக அளவில் சந்தையில் முதலீடு செய்து வருகின்றன.மேலும், எஸ்.ஐ.பி., எனப்படும் மாதம் தோறும் முதலீடு செய்யும் திட்டம் மூலமாக, ஒவ்வொரு மாதமும், 6,௦௦௦ கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.வரும் நாட்களில் சந்தையின் போக்கு, சர்வதேச சந்தையின் போக்கிலும் அமையும். அமெரிக்க பங்குச் சந்தைகளும் வரலாற்று உச்சத்தில் வர்த்தகமாகின்றன.இந்த வாரம், தேசிய பங்குச் சந்தை குறியீட்டின், முதல் ரெசிஸ்டென்ஸ் 10,035. அடுத்து, 10,180. சப்போர்ட் 9,681 மற்றும் 9,783 ஆகும்.
நிப்டி சப்போர்ட் 9915,9865
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10050,10150
25 september details
divident
8k miles
------
bonus
--------
results
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 159000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM