** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 6 April 2017

6/4/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் இந்தாண்டில் புதிய உச்சத்தை தொட்டன. வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. சென்செக்ஸ் 30 ஆயிரம் புள்ளிகளை கடந்ததோடு, நிப்டி புதிய உச்சமாக 9,264.95-ஐ எட்டியது. ஆனால் ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கை தொடர்பான கூட்டம் மீதான எதிர்பார்ப்பால் பங்குச்சந்தைகள் சரிந்தன. இருப்பினும் மதியத்திற்கு மேல் முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் காரணமாக பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன
நேற்றைய நிப்டி 27 புள்ளிகள்  உயர்வுடன்   9265 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 62 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் சரிவுடன் 9205 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ஐஎல்எப்எஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தை வாங்குகிறது இண்டஸ்இந்த் வங்கி.
ஜெனரல் இன்சூரன்ஸ் பங்கு வெளியீடு
பொது காப்­பீட்டு துறை­யில், முதல் நிறு­வ­ன­மாக, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், விரை­வில் பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது.
மத்­திய அரசு, வரும் நிதி­யாண்­டில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், தான் கொண்­டுள்ள பங்­கு­களில், குறிப்­பிட்ட சத­வீ­தத்தை விற்று, 72,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது. அதில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, நான்கு காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் மூலம் மட்­டும், 11 ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது.அதன்­படி, நியூ இந்­தியா அஷ்­யூ­ரன்ஸ், ஓரி­யன்­டல், யுனை­டெட், நேஷ­னல் இன்­சூ­ரன்ஸ் ஆகிய நிறு­வ­னங்­களின் பங்கு வெளி­யீட்­டுக்கு, மத்­திய அமைச்­ச­ரவை, கடந்த ஜன­வ­ரி­யில் ஒப்­பு­தல் அளித்­தது. 
இந்­நி­லை­யில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், முதல் நிறு­வ­ன­மாக, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், விரை­வில், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது. ஜி.ஐ.சி., பங்கு வெளி­யீட்டு பணி­களை மேற்­கொள்ள, எட்டு நிறு­வ­னங்­களை நிய­மித்­துள்­ளது.
அயு பைனான்­சி­யர்ஸ், பி.எஸ்.பி., புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னங்­கள், விரை­வில், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.
வர்த்தக வாகனங்களைத் தயாரிக் கும் ஆட்டோமொபைல் நிறுவனங் களுக்கு பிஎஸ்-III தடை காரணமாக ரூ. 2,500 கோடி இழப்பு ஏற்படும் என்று தரச்சான்று நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது.
பிஎஸ்-III புகை சோதனைக் குள்பட்ட வாகனங்களை ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து தயாரிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல இந்த வாகனங்கள் விற்பனை மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்பட மாட்டாது என தெரிவித்தது.

இதனால் மார்ச் 31-ம் தேதி வரை கடைசி 2 நாள்களுக்கு அதிக தள்ளுபடி விலையில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் நிறுவனங்களுக்கு ஏற் பட்ட இழப்பு ரூ. 1,200 கோடியாகும். இது தவிர இந்நிறுவனங்களிடம் விற்பனையாகாமல் தேங்கியுள்ள வாகனங்களை பிஎஸ் IV நிலைக்கு உயர்த்த ரூ.1,300 கோடி செல வாகும். பங்குச் சந்தையில் பட்டிய லிட்டுள்ள கன ரக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் மொத்த வருவாயில் 2.5 சதவீத இழப்பு ஏற்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ந்த இழப்பு 2017 மற்றும் 2018 நிதி ஆண்டில் தொடரும் என்றும் விநியோகஸ்தர்களிடம் தேங்கியுள்ள பிஎஸ் III வாகனங் களைத் திரும்ப ஆலைகளுக்குக் கொண்டு வந்து அதில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை பின்னர்தான் இந்நிறுவனங்கள் எடுக்கும்.
கடந்த நிதி ஆண்டு இறுதி வரை இந்நிறுவனங்கள் பிஎஸ் III வாகனங்களைத் தயாரித்தன. மேலும் இவற்றுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்ததால் இவை உற்பத்தி செய்யப்பட்டன. மேலும் பிஎஸ் IV வாகனங்களின் விலை 10 சதவீதம் வரை அதிகமிருக்கலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் நிதி ஆண்டு இறுதியில் அதிக எண்ணிக்கையில் பிஎஸ் III வாகனங்களை வாங்கியதாக அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் ஏப்ரல் மாதத்திலிருந்து பிஎஸ் IV வாகனங்கள் உற்பத்தி செய்வதைக் கட்டாயமாக்கினாலும், ஏப்ரல் மாதம் வரை பிஎஸ் III வாகனங்களை விற்பனை செய்ய நீதிமன்றம் கால அவகாசம் அளிக்கும் என இந்நிறுவனங்கள் எதிர்பார்த்தன.
வாகனங்களுக்கு மார்ச் மாத இறுதியில் அளிக்கப்பட்ட தள்ளு படி விலையில் 80 சதவீதத்தை நிறுவனங்கள் ஏற்றுக் கொண் டுள்ளன. 20 சதவீதத்தை விநி யோகஸ்தர்கள் ஏற்றுக் கொண்ட தாகத் தெரிவிக்கப்படுகிறது.
விற்பனையாகாமல் தேங்கி யுள்ள 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையான பிஎஸ் III வாகனங்களில் மாற்றம் செய்ய ரூ. 1,300 கோடி தேவைப்படும்.
ஒவ்வொரு வாகனத்திலும் மாற் றம் செய்ய குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செலவிட வேண்டியிருக்கும்.
நிப்டி சப்போர்ட் 9222,9190
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9288,9310
6 apr
spilits
----
divident
---
results
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 132000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் 
திருநுதற்கு இல்லை இடம்.
 உரை: 
நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!.
Translation: 
For her with beauteous brow, the maid I love, there place is none; 
To give her image room, O pupil of mine eye, begone! .
Explanation: 
O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.

Image may contain: text