** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 8 May 2015


தொண்டையில் ஏற்படும் புண் குணமாக சில உணவுகள்

குளிர்காலம் என்றாலே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது உடலில் நிறைய பிரச்சினைகள் ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளில் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவையே முதன்மையானவை. ஏனென்றால் அப்போது அதிக குளிர்ச்சி காரணமாக, உடலில் உள்ள வெப்பமானது வெளியேறும்.
எனவே இந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த காலத்தில் சாப்பிடும் உணவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதிக குளிர்ச்சியான உணவுகள் இந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு, தொண்டையில் கரகரப்பு ஏற்பட்டு, இறுதியில் புண்ணை ஏற்படுத்திவிடும்.
ஆகவே தொண்டையில் கரகரப்பு ஏற்படும் போதே, ஒரு சில உணவுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த கரகரப்பு முற்றினால், பின்னர் தொண்டையில் புண் ஏற்பட்டு, எந்த ஒரு உணவையும் சாப்பிட முடியாத அளவில் செய்துவிடும். சொல்லப்போனால் எச்சிலைக் கூட விழுங்க முடியாது.
இந்த நிலையிலும் தொண்டையில் ஏற்படும் புண்ணை தடுக்க உணவுகள் தான் உதவுகின்றன. எனவே அத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், தொண்டையில் புண் வராமல் தடுப்பதோடு, வந்த புண்ணையும் சரிசெய்யலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
சிக்கன் சூப்: இருமல் இருந்தால், மருத்துவர்களின் மருந்து என்னவென்றால், அது சூடான சூப் தான். ஏனெனில் அவை தொண்டையில் உள்ள புண்ணை சரிசெய்து, அதனால் ஏற்படும் எரிச்சலைத் தடுத்து, தொண்டைக்கு சற்று இதமாக இருக்கும்.
மசாலா டீ: டீ போடும் போது அதில் அதிகமான காரப் பொருட்கள் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்க வேண்டும். அதிலும் காரப்பொருட்களான கிராம்பு, மிளகு மற்றும் ஏலக்காய் சேர்த்து குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.
இஞ்சி: தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பொருள். அதிலும் அந்த இஞ்சியை தண்ணீரிலோ அல்லது ஆல்கஹாலிலோ போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு ஒரு நிமிடத்தில் சரியாகிவிடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
தயிர்: அனைவரும் தயிர் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருள் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில், தயிரை சாப்பிட்டால், அவை வயிற்றை தான் குளிரச் செய்யும். அதிலும் அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்பத்தில் வைத்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் வலி சரியாகிவிடும்.
எலுமிச்சை சாறு மற்றும் தேன்: சிட்ரஸ் பழங்களில் ஆன்டி-வைரல் பொருள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை சாற்றில், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரஸால் ஏற்பட்டிருக்கும் புண்ணானது குணமாகிவிடும்.
வெதுவெதுப்பான ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம்: சளி ஏதேனும் பிடித்தருந்தால் அப்போது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், வெதுவெதுப்பான நீரில் ஓட்ஸை கலந்து, அத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால், ஈஸியாக விழுங்க முடியும். அதுமட்டுமின்றி, அவை தொண்டைக்கு ஒரு படலம் போன்றதை ஏற்படுத்தி, புண்ணை எளிதில் குணமாக்கிவிடும்.
மிளகு: காரப் பொருட்களில் ஒன்றான மிளகை சாப்பிட்டால், தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும். எனவே இருமல் அல்லது சளி இருக்கும் போது மிளகு சாப்பிடுவது எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்துவிடும்.
ஆப்பிள் சீடர் வினிகர்: தொண்டைப் புண்ணை சரிசெய்யும் பொருட்களில் ஆப்பிள் சீடர் வினிகர் மிகவும் சிறந்தது. ஆகவே இதனை சாலட் சாப்பிடும் போது அதன் மேல் ஊற்றியோ அல்லது அப்படியே ஒரு ஸ்பூனோ சாப்பிடலாம்.

வாழ்க்கை...
வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும்,
உனக்குள் உள்ள உனது பலத்தை உனக்கு புரியவைக்கும்
உனது பலவீனத்தை உனக்கு தெரியவைக்கும்…
நல்ல அனுபவம் கிடைக்கும் போது பரவசப்படனும்…
மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவப்படனும்…
08/05/2015... வெள்ளி... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தன. சரிவுடன் துவங்கிய இன்றைய வர்த்தகம், ரூபாயின் மதிப்பு கடந்த 20 மாதங்களில் அல்லாத அளவுக்கு கடுமையா சரிந்தது, வரிவிதிப்பு பயத்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை விற்பனை செய்வது, நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது போன்ற காரணங்களால் தொடர்ந்து பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன..
நேற்றைய நமது நிப்டி 39 புள்ளிகள் சரிந்து 8057 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 82 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 70 புள்ளிகள் சரிவுடன் 8127 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மோடி பிரதமர் ஆனதில் இருந்தே முதலீட்டாளர்களுக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுகள் ஆன நிலையிலும் சந்தை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நிப்டி 10 சதவீதம் வரை சரிந்துள் ளது. அதே சமயத்தில் மோடி அரசு பொருளாதாரத்தை வலுப்படுத்து வதற்கான வேலைகளில் உள்ளது. ஆட்சிக்கு வந்த 12 மாதங்களில் இரண்டு மூன்று வருடங்களில் செய்ய வேண்டிய வேலைகளை செய்துள்ளது என்றும் சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். மேலும் சந்தையின் இந்த சரிவு தற்காலிகமானது, இந்திய சந்தை சிறப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
நிப்டி சப்போர்ட் 8060,8000
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8120,8190
08-May-2015Details
Dividends
Reliance Industries Ltd
Board Meetings
Ajanta Pharma Ltd
Allahabad Bank
Eicher Motors Ltd
Gillette India Ltd
GlaxoSmithkline Consumer Healthcare Ltd
Glaxosmithkline Pharma Ltd
Hindustan Unilever Ltd
Indian Overseas Bank
Kansai Nerolac Paints Ltd
Kirloskar Oil Engines Ltd
Magma Fincorp Ltd
Orient Cement Ltd
Procter & Gamble Hygiene and Health Car
Punjab National Bank
Vardhman Textiles Ltd
Westlife Development Ltd
Results
Ajanta Pharma Ltd
Allahabad Bank
Eicher Motors Ltd
Gillette India Ltd
GlaxoSmithkline Consumer Healthcare Ltd
Glaxosmithkline Pharma Ltd
Hindustan Unilever Ltd
Indian Overseas Bank
Kansai Nerolac Paints Ltd
Kirloskar Oil Engines Ltd
Magma Fincorp Ltd
Orient Cement Ltd
Procter & Gamble Hygiene and Health Car
Punjab National Bank
Vardhman Textiles Ltd
Westlife Development Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 445
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் 
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
உரை: 
கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.
Translation: 
The king, since counsellors are monarch's eyes, 
Should counsellors select with counsel wise.
Explanation: 
As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.