22/9/2016...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் நேற்று முந்தினம் சரிவை சந்தித்த நிலையில் (செப்., 21-ம் தேதி) ஏற்ற - இறக்கத்துடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் ஆரம்பமானதாலும், வர்த்தகம் துவங்கும் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் அதன்பின்னர் வர்த்தகம் சரிய தொடங்கின. ரூபாயின் மதிப்பு சரிந்தது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் சரிந்தன
நேற்றைய நிப்டி 1 புள்ளிகள் உயர்வுடன் 8777 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 163 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 400 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 70 புள்ளிகள் உயர்வுடன் 8844 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (செபி) புதிய தலைவரை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தலைவராக இருக்கும் யூ.கே.சின்ஹாவின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சின்ஹா தலைவராக நியமனம் செய்யப் பட்டார். மீண்டும் இரண்டு ஆண்டு களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் மேலும் ஒரு ஆண்டுக்கு பதவி நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய தலை வரை தேடும் பணியை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. தனியார் துறையை சேர்ந்த அதிகாரிகள், குடிமைப்பணி அதிகாரிகள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
25 வருடங்களுக்கு மேலான பணி அனுபவம் மற்றும் 50 முதல் 60 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சட்டம், நிதி, பொருளாதாரம் உள்ளிட்ட சில துறைகளில் அனுபவம் உள்ளவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேசி அக்டோபர் 21 ஆகும். ஏழாவது சம்பள கமிஷன்படி `செபி’ தலைவருக்கு ஊதியம் ரூ.4.5 லட்சமாகும்.
ஐடியா நிறுவனம், ‘டிவி’ சானல் துவக்க திட்டமிட்டு உள்ளது.
ஐடியா செல்லுலார், தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவின், ‘4ஜி’ சேவை துவங்கியதை அடுத்து, தொலைத்தொடர்பு துறையில் உள்ள நிறுவனங்களிடம், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஐடியா நிறுவனம், மொபைல் கேம்ஸ், வீடியோஸ், மியூசிக், ஐடியா ‘டிவி’, ஐடியா ‘நியூஸ்’ உள்ளிட்டவற்றை துவக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, ஐடியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க உள்ளது. தற்போது, 40 கோடி மக்கள் வசிக்கும் பகுதிகளில், எங்கள் இணையதள சேவை உள்ளது. இதை, 2017 மார்ச் மாதத்திற்குள், 50 கோடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு விரிவுபடுத்த உள்ளோம். மேலும், பல விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிப்டி சப்போர்ட் 8747,8717
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8820,8855
22 september
divident
idea
kwality
marksans pharma
omaxe
pnc infra
rajesh expo
vakrance
suntech realty
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM