பிரார்த்தனை
ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்யுங்கள்;ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்யுங்கள்;நமக்கு மேலுள்ள சக்தியை-அவரவர்களுடைய இஷ்ட தெய்வத்தை- குல தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.தினமும் இரவு படுக்கைக்குச் செல்லுமுன் கிழக்கு நோக்கி அமர்ந்து இறைவா இன்றைய தினம் என்னுடைய வாழ்வில் பல சோதனைகள் செய்தாய் ! அந்த சோதனைகளில் நான் என்னையறியாமல் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து நாளைய பொழுது நல்ல பொழுதாக விடிய எனக்கு அருள்புரிய வேண்டும் என பிராத்தனை செய்துவிட்டு படுங்கள். அன்றைக்கு நமக்கு ஏதாவது நன்மைகள் நடந்திருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள்.இன்று இரவு எனக்கு அமைதியான தூக்கத்தைக் கொடு இறைவா! என்று நம்முடைய கவலைகள்,வருத்தங்கள் அனைத்தையும் ஆண்டவனிடம் ஒப்படைத்துவிட்டு ஏதாயிருந்தாலும் நாளைக் காலையில் ஆண்டவன் நமக்கு நல்வழி காட்டுவான் என்று நம்பிக்கையுடன் படுங்கள். அமைதியான, நிம்மதியான தூக்கம் வரும்.
காலையில் எழும்போது இறைவா இன்றைய பொழுது நல்ல பொழுதாக இருக்கவேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து விட்டு எழுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
பிரார்த்தனை நமக்கு உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்றது;நமக்கு வாழ்க்கை மீது இருக்கும் பயத்தைப் போக்கி தைரியத்தைக் கொடுக்கின்றது; நமது மனப் பதட்டத்தைப் போக்கி மன அமைதியைத் தருகிறது; இரவுப் பிரார்த்தனை மன அமைதியையும் நல்ல தூக்கத்தையும் தருகிறது; காலைப் பிரார்த்தனை அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்துடன் உழைக்கதேவையான மன வலிமையைத் தருகிறது. மனதையும் உடலையும் ரீசார்ஜ் செய்கிறது.
முஸ்லீம் அன்பர்கள் தினமும் 5 முறைத் தொழுகை செய்து உடலையும் உள்ளத்தையும் ரீசார்ஜ் செய்து கொள்கிறார்கள்.இந்துக்களாகிய நாம் ஒரு நாளைக்கு இரு முறையாவது ரிசார்ஜ் செய்து கொள்வோமே.
மீண்டும் சிந்திப்போம் !!