16/8/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் அதிரடி உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. காலையில் ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது வெகுவாக உயர்ந்தன. இதனால் பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் ஏற்றத்துடனேயே காணப்பட்டன
நேற்றைய நிப்டி 80 புள்ளிகள் உயர்வுடன் 8672 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 53 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8692 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கடந்த சில காலாண்டுகளாக பொதுத் துறை வங்கிகள் நஷ்டம் அடைந்து வரும் சூழ்நிலையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டிலும் வங்கிகளின் நஷ்டம் தொடர்கிறது. இதுவரை வெளியான காலாண்டு முடிவுகளில் 5 பொதுத்துறை வங்கி கள் மொத்தம் ரூ.4,014 கோடி அள வுக்கு நஷ்டம் அடைந்திருக்கின்றன.
பேங்க் ஆப் இந்தியா, தேனா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மஹாராஷ்ட்ரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் அலாகாபாத் வங்கி ஆகிய ஐந்து வங்கிகள் நஷ்டம் அடைந்திருக்கின்றன.
இதற்கிடையே நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முதல் காலாண்டு மொத்த லாபம் 78 சதவீதம் சரிந்து ரூ.1,046 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.4,714 கோடியாக இருந்தது.
ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியின் நிகர லாபம் 61 சதவீதம் சரிந்து ரூ.100 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.257.84 கோடியாக இருந்தது.
பேங்க் ஆப் இந்தியா வாராக்கடனுக்காக அதிக தொகை ஒதுக்கீடு செய்ததால் ரூ.741 கோடி அளவுக்கு நஷ்டமடைந்துள்ளது. வாராக்கடனுக்காக கடந்த வருடம் இதே காலத்தில் 151 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள இந்த வங்கி இப்போது ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஜூன் 30 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக்கடன் 13.38 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 6.80 சதவீதமாக இருந்தது.
பேங்க் ஆப் இந்தியாவை தொடர்ந்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் நஷ்டம் ரூ.600 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.203 கோடி அளவுக்கு நிகர லாபம் ஈட்டி இருந்தது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 580 கோடியாக இருந்த இந்த தொகை இப்போது ரூ.1,543 கோடியாக அதிகரித்திருக்கிறது.
பேங்க் ஆப் மஹாராஷ்டிராவின் ஜூன் காலாண்டு நஷ்டம் ரூ.397.40 கோடியாக இருக்கிறது. இந்த வங்கியும் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை இரு மடங்களவுக்கு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.483 என்ற நிலையில் இருந்து இப்போது ரூ.842 கோடியாக அதிகரித்திருக்கிறது.
தேனா வங்கியின் நஷ்டம் ரூ. 279 கோடி ஆகும். இந்த வங்கியின் மொத்த வாராக்கடன் அளவுக் இரு மடங்காகியுள்ளது. கடந்த வருடம் 6.20 சதவீதத்தில் இருந்து இப்போது 11.88 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. தொகை அடிப்படையில் பார்க்கும் போது ரூ.4,840 கோடியில் இருந்து ரூ.9,636 கோடியாக அதிகரித்திருக்கிறது.
சென்னையைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) முதல் காலாண்டில் ரூ.1,450 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த வங்கி ரூ.14 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கியின் மொத்த வாராக்கடன் 20.48 சதவீதமாக உள்ளது.
அலாகாபாத் வங்கியின் நஷ்டம் 564 கோடியாக அதிகரித்திருக்கிறது. இந்த வங்கி வாராகடனுக்காக ஒதுக் கீடு செய்த தொகை ரூ.854 கோடி யில் இருந்து ரூ.1,337 கோடியாக அதிகரித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8622,8575
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8700,8733
16 AUGUST details
ab nuvo
result
pfc
just dial
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ (99000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM