>>>>வாழ்வில் வெற்றி அடைய எளிய வழிகள்<<<<<
யாருக்காவது உதவும் என்னும் நோக்கில் பதிவிடுகிறேன்.
மாபெரும் திட்டங்கள் வகுப்பது ஒரு புறம் இருக்கட்டும். தினமும் சில எளிதான இலக்குகளை Easy Targets குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அன்றைய பொழுது சாய்வதற்குமுன் இதைச்செய்து முடித்துவிடுவேன் என்ற முனைப்புடன் செயலாற்றுங்கள்.
‘அட! நம்மால் நினைத்ததைச் செய்து முடிக்க முடிகிறதேÐ என்ற நம்பிக்கை உற்சாக ஊற்று உங்கள் உள்ளத்தில் பீறிட்டு எழுவதை உணர்வீர்கள்.
தினமும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவிர, உங்கள் வாழ்வின் உயர் லட்சியத்தை Life Project அடையும் நோக்கில், 10 பணிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை எப்படியும் அன்றைய பொழுதிற்குள் செய்து முடிக்க உறுதியுடன் செயல்படுங்கள். இரவு படுக்கும் முன் எவ்வளவு தூரம் நம் பணிகளை முடித்திருக்கிறோம் என்று மதிப்பீடு செய்து பாருங்கள். விகடனின் விமர்சனக் குழு மார்க் போடுவதûப் போல இது போன்ற தினசரி மதிப்பீடு ‘Self-assessment’ நீங்கள் உங்கள் நேரான பாதையை விட்டுவிலகாமல், உங்களைக் காப்பாற்றும், ஒரே வெட்டில் மரம் வீழ்ந்து விடுவதில்லை.
நீண்ட தூரங்களையும் ஒவ்வொரு மைலாகத்தான் கடக்க வேண்டும். நம் இலட்சிய மாளிகையை அடைய ஒவ்வொரு அடியாகத் தொடர்ந்து, நேரான பாதையில் நடை போடுவோம். சிறுசிறு வெற்றிகளையும் கொண்டாடும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வோம்.
சிந்தனையில் தெளிவும், செயலாற்றுவதில் உறுதியும் இருக்கும் வரை எந்தச் சக்தியாலும் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது.