23/12/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முதலீட்டாளர் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கி, சரிவிலேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 48 புள்ளிகள் சரிந்து 7786 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 165 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 7836 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நேற்றைய வர்த்தகத்தில் 11 வருடங்களுக்கு முன்பிருந்த விலை அளவுக்கு கச்சா எண்ணெய் சரிந்தது. சர்வதேச அளவில் உற்பத்தி அதிகரித்து வருவதன் காரணமாகவும், அடுத்த வருடத்தில் தேவை குறையும் என்ற கணிப்புகள் காரணமாகவும் கச்சா எண்ணெய் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஈரான், லிபியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து அதிக உற்பத்தி சந்தைக்கு வருகிறது. கடந்த ஏழு வருடங்களில் மாதாந்திர அளவில் கச்சா எண்ணெய் கடும் சரிவை சந்திப்பது இப்போதுதான்.
கச்சா எண்ணெய் விலை சரிவதன் காரணமாக வாடிக்கை யாளர்கள் பயன் அடைந்தாலும், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் செலவுகளை குறைப்பது, ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகின்றன. தவிர எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் வருமானம் குறைவதன் காரணமாக நிதி நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுவருகிறது.
பிரென்ட் பியூச்சர்ஸ் 2 சதவீதம் சரிந்து ஒரு பேரல் 36.05 டாலராக வர்த்தகமானது. கடந்த 2004-ம் ஆண்டு ஜூலைக்கு பிறகு குறைந்த விலை இதுவாகும். இந்த மாதத்தில் மட்டும் பிரென்ட் பியூச்சர்ஸ் 18.5 சதவீதம் சரிந்தது. கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் லேமென் பிரதர்ஸ் பிரச்சினை போது ஒரே மாதத்தில் கச்சா எண்ணெய் அதிகமாக சரிந்தது. அதன் பிறகு அதிகம் சரிவது இப்போதுதான்.
கச்சா எண்ணெய் விலையில் ஒவ்வொரு டாலர் சரிவும் வருங்கா லத்தில் கடும் நெருக்கடியை உண்டாகும் என சாக்ஸோ வங்கியின் முதன்மை மேலாளர் ஒலே ஹான்சென் தெரிவித்தார்.
கடந்த ஒரு வருடத்தில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. இதனால் வெனிசுலா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் கடும் நெருக் கடியில் உள்ளன. 2016-ம் ஆண் டிலும் இந்த நாடுகள் கடும் நெருக்கடியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
பொருளாதாரத்தில் பலமாக இருக்கும் அரபு நாடுகள் கூட இதில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கச்சா எண்ணெய் சரிவில் இருந்து தங்கள் நாணயங்களை பாதுகாக்க அரபு நாடுகள் வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கின்றன. சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகள் வட்டியை உயர்த்தி உள்ளன. ஈராக் தன்னுடைய தினார் கரன்ஸியின் மதிப்பை செயற்கையாக குறைத்திருக்கிறது.
தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்திருக் கிறது.
அமெரிக்கா அரசு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கடந்த 40 வருடங்களாக தடுத்து வைத்திருந் தது. இப்போது அந்த தடையை விலக்கி இருப்பதால் கச்சா எண்ணெய் வரத்து அதிகரித் துள்ளது. சந்தையை கைப்பற்ற போட்டி அதிகரித்துள்ளது.
இதற்கிடையே சி.எல்.எஸ்.ஏ நிறுவனத்தின் நிர்வாக இயக் குநர் கிறிஸ்டோபர் வுட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 20 டாலர் வரை சரியும் என கணித்திருக்கிறார். இதே கருத்தை தான் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமும் கூறி இருக்கிறது. சீனா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் நுகர்வு குறித்த சந்தேகம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளன.பிட்ச் நிறுவனம் 2018-ம் ஆண்டு வரை பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 55 டாலருக்கு மேல் செல்ல வாய்ப்பு இல்லை என்று கணித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7760,7730
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7830,7877
23-Dec-2015Details
dividends
pfc
board meet
hatsun agro
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM