17/3/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிக ஏற்றத்துடன் இருதினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்த இருந்ந நிலையில் (மார்ச் 16ம் தேதி) உயர்வுடன் முடிந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கின. ஆனால் மதியத்திற்கு மேல் வர்த்தகம் உயர தொடங்கின. அமெரிக்க பெடரல் வங்கியின் இரண்டு நாள் கூட்டம் நடைபெறுவதால் இதில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பால் பங்குச்சந்தைகள் உயர்ந்தன. குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகள் ஏற்றம் காண இறுதியில் வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன
நேற்றைய நிப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 7498 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 74 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 100 புள்ளிகள் உயர்வுடன் 7598 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7470,7430
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7533,7570,7666
வலைதளம் வாயிலாக, பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வரும், ‘இன்பிபீம் இன்கார்ப்பரேஷன்’ நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 450 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, வரும், 21ம் தேதி துவங்கி, 23ம் தேதி முடிவடைகிறது. பங்கு ஒன்றின் விலை, 360 – 432 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றிய, விஷால் மேத்தா, 2007ல், இந்தியா திரும்பி, இன்பிபீம் இன்கார்ப்பரேஷன் நிறுவனத்தை துவக்கினார். குஜராத் தலைநகர் ஆமதாபாத்தை, தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், வலைதளம் வாயிலாக, ஆடைகள், புத்தகங்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில், ‘ஐபோன்’ விற்பனைக்கு ஆப்பிள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நிறுவனம், இன்பிபீம் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு தடைக்குப் பிறகு விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா மாத்திரை உற்பத்தி, மற்றும் விற்பனையை புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் மருந்துகள் (பாராசிட்டமால்+பினைல்பிரைன்+கஃபைன்) மீது மத்திய அரசு உடனடி தடை உத்தரவு பிறப்பித்ததால் விக்ஸ் ஆக்சன் 500 எக்ஸ்ட்ரா என்ற தலைவலி, காய்ச்சல் மாத்திரை உற்பத்தி, விற்பனை நிறுத்தப்பட்டது.
மார்ச் 10-ம் தேதியன்று அரசு இதழ் அறிவிக்கையின் படி இருமல் மருந்தான குளோரோபினமின் மாலியேட்+கோடைன் சிரப் சேர்க்கை மருந்து வகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
திங்களன்று ஃபைசர் மற்றும் அபாட் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்களது இருமல் மருந்தான கோரக்ஸ் மற்றும் பென்சிடில் ஆகியவற்றை முறையே விற்பனை மற்றும் உற்பத்தியை நிறுத்தி விட்டன.
டிசம்பர் 31-ம் தேதி முடிந்த 9 மாத காலத்தில் மட்டும் ஃபைசரின் கோரெக்ஸ் இருமல் மருந்து சுமார் 176 கோடி ரூபாய் அளவுக்கு விற்றுத் தீர்த்துள்ளது.
30 ஆண்டுகளாக இந்தியாவில் மருத்துவர்களால் அனைத்து மாநிலங்களிலும் பரிந்துரைத்துத் தீர்க்கப்பட்ட கோரக்ஸ் இனி இல்லை.
இத்தனையாண்டு காலம் பாதுகாப்பாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மருந்துகளைத் தடை செய்வதன் மூலம் தங்கள் நிறுவனங்களின் லாப விகிதம் பாதிப்படையும் என்பதோடு, இவற்றுக்கான மாற்று மருந்து, அதாவது டி.சி.ஜி.ஐ. அனுமதி கொடுத்துள்ள மருந்துகள் எளிதில் மக்களுக்கு கிடைக்குமா என்பது குறித்து தாங்கள் கவலையடைந்துள்ளதாக நிறுவனங்கள் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய மருந்துச் சந்தைகளில் மருத்துவ அறிவியலுக்குப் புறம்பான சேர்க்கைகளில் மருந்துகள் புழங்கி வருவது பற்றி ஏற்கெனவே நிறைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் 344 அதீத மருந்துக் கலவைகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
17 MAR DETAILS
DIVIDENT
biocon
disman pharma
vguard
tvs motor
ttk prestige
reliance
hpcl
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 80000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM