** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 26 September 2018

பங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..

பங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்

செபி வரும் டிசம்பர் 5, 2018ம் தேதிக்குள் பங்குகளை காகித வடிவத்தில் வைத்து இருக்கும் அனைவருமே டிமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்று கூறி விட்டது.

அவ்வாறு மாற்றா விட்டால் அனைத்துமே வெறும் காகிதம் தான். மதிப்பில்லை என்பதையும் கவனிக்க!

கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமான பணம் இப்படி காகித வடிவத்தில் தான் உள்ளது.

அதிலும் ITC, Reliance, MRF, Sun Pharma போன்ற நீண்ட வரலாறுடைய நிறுவனங்களில் தான் இந்த மாதிரியான பங்குகள் அதிகம் உள்ளன. இந்த பங்குகள் மதிப்பும் இந்த இடைப்பட்ட காலத்தில் பல மடங்குகளில் பெருகி விட்டன.

இருபது வருடங்களுக்கு முன்பு முதலீடு செய்து அதில் போனஸ், Split என்று செய்து இருப்பார்கள். தற்போது பங்கு மதிப்பை பார்த்தால் பல மடங்குகளில் பெருகி இருக்கும்.

அதனால் அவசர முக்கியத்துவம் கொடுத்து மாற்றி விடுங்கள்!

வழிமுறை என்னவென்று பார்த்தால்,

முதலில் ஒரு டிமேட் கணக்கை திறக்க வேண்டும்.

அதன் பிறகு Demtaterialisation Request Form (DRF) படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் உங்களது அடையாள அட்டை நகலையும் அனுப்ப வேண்டும்.

அடுத்த 45 நாட்களில் உங்களது டிமேட் கணக்கிற்கு பங்குகள் வரவு வைக்கப்படும். அதன் பிறகு விற்றுக் கொள்ளலாம்!

தனியாக டிமேட் கணக்கு திறக்க வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ளலாம்...

SRIDHAR.ERODE.

9842746626
9842799622