15/05/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
காலையில் அதிரடி ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிய துவங்கின.
நேற்றைய நிப்டி21 புள்ளிகள் சரிவுடன் 9400 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 22 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 9430 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
காலாண்டு முடிவுகள்:
நெஸ்லே நிகர லாபம் 6.8% உயர்வு
எப்எம்சிஜி துறையின் முக்கியமான நிறுவனமான நெஸ்லேவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 6.8 சதவீதம் உயர்ந்து ரூ.306 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.287 கோடியாக நிகர லாபம் இருந்தது. நிகர விற்பனை 9.10 சதவீதம் உயர்ந்து ரூ.2,575 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,360 கோடியாக இருந்தது.
புதுமை மற்றும் நிறுவனத்தை சீரமைத்ததே இந்த வளர்ச்சிக்கு காரணம் என நெஸ்லே இந்தியாவின் தலைவர் சுரேஷ் நாராயணன் தெரிவித்தார். கடந்த 18 மாதங்களுக்கு முன்பு புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த திட்டம் செயல்பட தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் நாராயணன் தெரிவித்தார்.
நிறுவனத்தின் ஏற்றுமதி சீராக இருக்கிறது. கடந்த ஆண்டு 165 கோடியாக இருந்த ஏற்றுமதி, தற் போது 166 கோடியாக இருக்கிறது. பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் விற்பனை குறைந்ததால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது என நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஹீரோ மோட்டோ கார்ப் நிகர லாபம் 14% சரிவு
இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப் நிகர லாபம் 14 சதவீதம் சரிந்து ரூ.717 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.833 கோடியாக இருந்தது. மொத்த வருமானமும் 7.55 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.8,227 கோடியாக இருந்த மொத்த வருமானம், தற்போது ரூ.7,606 கோடியாக சரிந்திருக்கிறது.
வாகன விற்பனையும் 5.77 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு 17,21,240 வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில் தற்போது 16,21,805 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின.
ஆனால் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.3,112 கோடியாக இருந்த நிகர லாபம் 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.3,546 கோடியாக இருக்கிறது. 2016-17-ம் நிதி ஆண்டில் மொத்த வருமானம் ரூ.31,480 கோடியாக இருக்கிறது.
2018-19-ம் நிதி ஆண்டு வரை ரூ.2,500 கோடி விரிவாக்க பணிகளுக்காக முதலீடு செய் யப்படும். வங்கதேசத்தில் அமைக் கப்பட்டு வரும் ஆலை நடப்பு நிதி ஆண்டில் தொடங்கப்படும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் முன்ஜால் தெரிவித்தார். தவிர நடப்பு நிதி ஆண்டில் புதிய வெளியீடுகள் இருக்கும் என்றும் முஞ்சால் கூறினார். இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 30 ரூபாய் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. இடைக்கால டிவிடெண்டாக ரூ.55 ஏற்கெனவே வழங்கப்பட்டது.
பங்குச் சந்தையில், என்.எஸ்.இ., குறியீட்டு எண், நிப்டி, கடந்த வாரம் புதிய உச்சத்தை அடைந்தது.
சர்வதேச சந்தைகளான, டவ்ஜோன்ஸ், நாஸ்டாக் மற்றும் ஆசிய சந்தை குறியீட்டு எண்களும் உயர்ந்து, உச்சத்தில் வர்த்தகமானது. இதற்கு வி.ஐ.எக்ஸ்., எனப்படும் வோலைட்டலிட்டி இண்டெக்ஸ், கடந்த வாரம் அதன் 1993ம் ஆண்டின் அளவைவிட குறைவாக இருந்ததும் காரணமாகும். பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், இமானுவேல் மக்ரோன் வெற்றி பெற, புதிய பொருளாதார கொள்கைகள் அந்நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் விதமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு, சந்தைக்கு சாதகமானது.
மேலும், கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டு நிதி அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அதில் பாரதி இன்ப்ராடெல், கனரா வங்கி, யூனியன் வங்கி, கோத்ரெஜ், இண்டிகோ, பெட்ரோநெட் எல்.என்.ஜி., ஜி.எம்.டி.சி., சைமன்ஸ், டால்மியா, ஜி என்டர்டெயின்மென்ட், ஏசியன் பெயின்ட்ஸ், டாக்டர் ரெட்டி, டைட்டன் என பல நிறுவனங்கள், தங்களது லாபம், இதற்கு முந்தைய காலாண்டைவிட அதிகமாக இருந்ததாக, அறிக்கை வெளியிட்டன. இது, சந்தையில் நிப்டி அதன் உச்சத்தை காண உதவியது.வரும் நாட்களில். நிப்டியின் தாங்கு நிலை 9,370 ஆகும். இதற்கு குறையாமல் வர்த்தகம் ஆகும் நிலையில், 9,370 – 9,500 என வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை குறையும் எனில், 9,280 என்பது முக்கிய நிலை ஆகும்.
நிப்டி சப்போர்ட் 9370,9333
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9433,9469
15 may details
divident
------
bonus
----
results
bata
chennai petro
vedl
colgate
southbank
polaris
kajaria
tube investment
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 139000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM