** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 15 November 2016

15/11/2016... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 129 புள்ளிகள் சரிவுடன் 8296 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 21 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8316 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் நிகர லாபம் நான்கு மடங்கு உயர்ந்து ரூ.552 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் லாபம் ரூ.124 கோடியாக இருந்தது.
ஆனால் வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.12,300 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.12,046 கோடியாக சரிந்திருக்கிறது. அதே சமயம் மொத்த வாராக்கடன் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 5.56 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 11.35 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
நிகர வாராக்கடன் 3.08 சதவீதத் தில் இருந்து 5.46 சதவீதமாக அதிக ரித்திருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.1,843 கோடியில் இருந்து ரூ.1,630 கோடியாக சரிந்திருக்கிறது.
ஐஓபி நஷ்டம் ரூ.765 கோடி
பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நஷ்டம் ரூ.765 கோடியாக அதிகரித்திருக் கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நஷ்டம் ரூ.550 கோடியாக இருந்தது.
மொத்த வருமானமும் ரூ.6,769 கோடியில் இருந்து ரூ.5,961 கோடியாக சரிந்திருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.1,557 கோடியில் இருந்து ரூ.1,697 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 11 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 21.77 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடனும் 7.41 சதவீதத்தில் இருந்து 14.30 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
அதிக சந்தை மதிப்பு கொண்ட 10 இந்திய நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வார பங்குச்சந்தையில் சரிவைக் கண்டுள்ளது. இந்த 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.91,800 கோடி அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் மிகப் பெரிய அளவுக்குச் சரிந்துள்ளது.
டிசிஎஸ் தவிர, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, இன்போ சிஸ், ஹெச்டிஎப்சி மற்றும் ஹிந் துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறு வனங்களின் சந்தை மதிப்பும் சரிந்துள்ளன. ஹெச்டிஎப்சி பேங்க், ஓஎன்ஜிசி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்வைக் கண்டுள்ளன.
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.44,344.48 கோடி சரிந்து தற்போது ரூ.4,14,784.93 கோடியாக இருக்கிறது. ஹெச்டிஎப்சி நிறு வனத்தின் சந்தை மதிப்பு ரூ.17,344 கோடி சரிந்து ரூ.2,01,402.74 கோடி யாக உள்ளது. இன்போஸிஸ் நிறு வனத்தின் சந்தை மதிப்பு ரூ.11,243.55 கோடி சரிந்து தற்போது ரூ.2,11,743.84 கோடியாக உள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.10,063.88 கோடி சரிந்து தற்போது ரூ.1,73,336.76 கோடியாக உள்ளது. ஐடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.7,390.19 கோடி சரிந்து ரூ.2,94,395.81 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,414.25 கோடி சரிந்து தற்போது ரூ.3,24,791.58 கோடியாக உள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத் தின் சந்தை மதிப்பு ரூ.23,327.15 கோடி உயர்ந்து தற்போது ரூ.2,11,846.19 கோடியாக உள்ளது. ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.8,157.66 கோடி உயர்ந்து ரூ.3,25,210.41 கோடியாக உள்ளது. கோல் இந்தியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,432.07 கோடி உயர்ந்துள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.3,165.53 கோடி உயர்ந்துள்ளது.
மிக அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களில் டிசிஎஸ் நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து ஹெச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, இன்போசிஸ், கோல் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
நிப்டி சப்போர்ட் 8233,8171
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8345,8410,8522
15 NOV details
DIVIDENTS
AGIS
MONSONTO
GODREJ
result
GAIL
TATAGLOBAL
WELSPUN
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 993
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க 
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
 உரை:
நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.
Translation:
Men are not one because their members seem alike to outward view; 
Similitude of kindred quality makes likeness true.
Explanation:
Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.