20/2/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 43 புள்ளிகள் உயர்வுடன் 8821 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 4 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8841 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங்
இந்தியாவின் முக்கியமான குறி யீடான நிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில் மற்றும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் ஆகிய பங்குகள் இணைகின்றன. மாறாக பிஹெச்இஎல் மற்றும் ஐடியா ஆகிய பங்குகள் வரும் மார்ச் 31-ம் தேதியில் இருந்து வெளியேறுகின்றன. முக்கிய குறி யீடான நிப்டி 50 மட்டுமல்லாமல், நிப்டி 100, நிப்டி 500, மிட்கேப் 50, ஸ்மால்கேப் 50 ஆகிய குறியீட்டிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தவிர துறைவாரியான குறியீடுகளி லும் மாற்றங்கள் செய்யப்பட் டுள்ளன.
நிப்டி 100 குறியீட்டில் ஐசிஐசிஐ புரூ. லைப் இன்ஷூரன்ஸ், பெட்ரோ நெட் என்எல்ஜி, ஆர்இசி ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைகின் றன. மாறாக அப்போலோ ஹாஸ் பிடல்ஸ், பாரத் போர்ஜ் மற்றும் கேஸ்ட்ரால் இந்தியா ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன.
நிப்டி 500 குறியீட்டில் திலிப் பில்ட்கான், எல் அண்ட் டி இன்போ டெக், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப், குவிஸ் கார்ப், பாரக் மில்க் புராடக்ட்ஸ் உள்ளிட்ட 25 நிறுவனங் கள் இணைகின்றன.
பேங்க் ஆப் பரோடா நிகர லாபம் 253 கோடி
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் ரூ.253 கோடியாக இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,342 கோடியாக இருக்கிறது.
அதே சமயத்தில் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.11,726 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.12,181 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 11.40 சதவீதமாக இருக்கிறது. கடந்த செப்டம்பர் காலாண்டில் 11.35 சதவீதமாக இருந்தது.
வங்கியின் நிகர வாராக்கடன் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு 5.67 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் இப்போது 5.43 சதவீதமாக சரிந்திருக்கிறது. செப்டம்பர் காலாண்டிலும் 5.46 சதவீதமாக நிகர வாராக்கடன் இருந்தது.
எஸ்பிஐ நிகர லாபம் 134% உயர்வு
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) நிகர லாபம் 134 சதவீதம் உயர்ந்து ரூ.2,610 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,115 கோடியாக இருக்கிறது. நிகர வட்டி வருமானம் 8 சதவீதம் உயர்ந்து ரூ.14,751 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.13,697 கோடியாக இருந்தது.
வங்கியின் இதர வருமானம் 59 சதவீதம் உயர்ந்து ரூ.9,662 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.6,087 கோடியாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 7.23 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 5.10 சதவீதமாக இருந்தது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.7,645 கோடியாக ஒதுக்கீடு செய்த தொகை இப்போது ரூ.7,243 கோடியாக இருக்கிறது. வங்கியின் டெபாசிட் 22 சதவீதம் உயர்ந்து ரூ,.20,40,778 கோடியாக இருக்கிறது. ஆனால் கடன் வளர்ச்சி விகிதம் 4 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
பேங்க் ஆப் இந்தியா நிகர லாபம் ரூ.101 கோடி
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் ரூ.101 கோடியாக இருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை குறைவாக இருப்பதினால் இந்த காலாண்டில் லாபம் ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,505 கோடி ரூபாய் அளவுக்கு நிகர நஷ்டம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த காலாண்டில் மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.11,086 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.11,594 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.3,603 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இப்போது ரூ.2,546 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 13.38 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடன் 7.09 சதவீதமாக இருக்கிறது. காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருப்பதால் இந்த பங்கின் வர்த்தகம் நேற்று 52 வார உச்சபட்ச விலையை தொட்டது. வர்த்தகம் முடிவில் 3 சதவீதம் உயர்ந்து 136.85 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 8785,8745
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8845,8875
20 feb details
divident
solar ind
result
---
bonus
----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM