2/3/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதால் பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டன. வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. சென்செக்ஸ் 230 புள்ளிகளும், நிப்டி 61 புள்ளிகளும் உயர்வுடன் ஆரம்பமான நிலையில் டிசம்பர் மாதத்திற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இருந்தாலும், முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டதாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும் நாள்முழுக்க பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 66 புள்ளிகள் உயர்வுடன் 8945 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 303 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8985 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
மூன்றாம் காலாண்டு வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கிறது. பணமதிப்பு நீக்கம் செய்யப் பட்டதால் வளர்ச்சி குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்ட சூழ்நிலையில் 7 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது. டிசம்பர் காலாண்டில் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக இருந்தது.
பெரும்பாலான வல்லுநர்கள் 6.4 சதவீத வளர்ச்சி என கணித் திருந்த நிலையில் 7 சதவீத வளர்ச்சியடைந்திருக்கிறது. அதே போல நடப்பு நிதி ஆண்டு மொத்த வளர்ச்சியிலும் மாற்றம் இல்லை. ஏற்கெனவே கணிக்கப்பட்ட 7.1 சதவீத வளர்ச்சி எட்ட முடியும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 7.2 சதவீத வளர்ச்சி யும், இரண்டாம் காலாண்டில் 7.4 சதவீத வளர்ச்சியும் எட்டப்பட்டது.
பணமதிப்பு நீக்கத்தால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை வளர்ச்சி விகிதம் காண்பிப்பதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
அதே சமயம், முறையற்ற வேலைகளில் பெரும்பாலான வர்கள் பணிபுரிவதால் ஜிடிபி தகவல்கள் நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை பிரதி பலிக்காது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோச கர் அர்விந்த் சுப்ரமணியன் கடந்த மாதம் கூறினார். பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் இந்த வளர்ச்சி ஆச்சர்யம் அளிப்பதாக தெரிவித்தனர்.
நிதி பற்றாக்குறை இலக்கு
நடப்பு நிதி ஆண்டுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிதிப் பற்றாக்குறை இலக்கு முழுமையாக எட்டப்பட்டது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஜனவரி வரை) நிதிப் பற்றாக்குறை ரூ.5.64 லட்சம் கோடியாக அல்லது 105.7 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிதிப்பற்றாக்குறை 95.8 சதவீதமாக இருந்தது.
முதல் பத்து மாதங்களில் நிகர வரி வருமானம் 8.16 லட்சம் கோடியாக இருக்கிறது. பொதுவாக நிதி ஆண்டின் கடைசி இரு மாதங்களில் வரி வருமானம் அதிகமாக இருக்கும். அதனால் நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவதில் சிரமம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதமாக (ஜிடிபியில்) இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த நிதி ஆண்டில் (2017-18) நிதிப்பற்றாக்குறையை 3.2 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
சன் பார்மா நிகர லாபம் 5% சரிவு
சன் பார்மா நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 4.72 சதவீதம் சரிந்து ரூ.1,471 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,544 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.7,122 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.7,912 கோடியாக உயர்ந் திருக்கிறது.
அமெரிக்காவில் விற்பனை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந் திருக்கிறது. மொத்த விற்பனையில் அமெரிக்காவில் 45 சதவீதம் உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் 96% சரிவு
டிசம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 96 சதவீதம் சரிந்து ரூ.111.57 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,952 கோடியாக நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் விற்பனை 2.2 சதவீதம் சரிந்து ரூ.67,864 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.69,398 கோடியாக இருந்தது. இதன் காரணமாக இந்த பங்கு 4.60 சதவீதம் அளவுக்கு சரிந்தது. வர்த்தகத்தின் இடையே 7.34 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
இந்த சரிவு காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,993 கோடி அளவுக்கு சரிந்தது. பிஎஸ்இ-யில் 12.42 லட்சம் பங்குகளும், என்எஸ்இ ஒரு கோடி பங்குகளும் வர்த்தகமானது.
நிப்டி சப்போர்ட் 8910,8875
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8971,8999
2 march
bonus
-----
divident
hexaware
symphony
results
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
ShareMarket
Share Market, sensex, nifty, gold rate, gold, ncx, bse,nse, america stock exchange, equity, commodity
PANGUVARTHAGAULAGAM.BLOGSPOT.COM