1/7/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வர்த்தகநேர துவக்கத்தில், உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது
நேற்றைய நமது நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 8368 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 23 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 15 புள்ளிகள் உயர்வுடன் 8383 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் கிரீசில் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் ஒருவாரம் மூடப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் தெரிவித்துள்ளார். நிதியுதவி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து மந்தமடைந்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கிரீஸ் பிரதமரின் அறிவிப்பால் இன்று முதல் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் நாட்டுகள் மக்கள் உடனடியாக வங்கிகள் மற்றும் சந்தையில் இருக்கும் தங்களது முதலீடுகள் மற்றும் சேமிப்புகளை உடனடியாக குறைக்க இது வழிவகுக்கும் எனவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வங்கிகள் மூடப்பட்டதால் கிரீசில் ஏ.டி.எம்., சேவையும் முடங்கி உள்ளது.
ஆன்லைன் மூலமான வெளிநாட்டு பண பரிமாற்றமும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உள்நாட்டில் மின்னணு பரிமாற்றம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிமாற்றங்கள் எவ்வித தடையின்றி இயங்கும் என கிரீஸ் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக உலகின் பெரும்பாலான நாடுகளின் பங்குச் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நெருக்கடி நிலை காரணமாக ஐரோப்பிய சந்தைகளில் உலக நாடுகளின் முதலீடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நடப்பு ஜூன் மாதத்தில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.2,500 கோடி முதலீடு வெளியேறியது. மற்ற ஆசிய நாடுகளில் இருக்கும் முதலீட்டு வாய்ப்பு மற்றும் கிரீஸ் பிரச்சினை காரணமாக இந்திய சந்தையில் உள்ள முதலீட்டை அந்நிய முதலீட்டாளர்கள் எடுத்து வருகிறார்கள்.
ஆனால் அதேசமயம் கடன் சந்தையில் ரூ2,300 கோடியை அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.
இந்திய சந்தையை விட சீன பங்குச்சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு அதிக லாபம் கிடைத்திருப்பதால் அந்நிய முதலீட்டாளர்கள் அங்கு முதலீடு செய்ய ஆரம்பித்திருக் கிறாரகள். மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானம் குறித்த சந்தேகமும் முதலீட்டாளர்களுக்கு இருப்பதால் முதலீட்டை வெளியே எடுத்து வருகிறார்கள் என்று ஜியோஜித் பி.என்.பி.பரிமா நிறுவ னத்தின் பங்குச்சந்தை நிபுணர் விகே விஜய்குமார் தெரிவித்தார்.
அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது குறித்து கவலை கொள்ளத்தேவை இல்லை. கிரீஸ் பிரச்சினைக்கு முடிவு மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பின்னர் இந்தியா பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரும் என்று பி.என்.பி. பரிபா மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அலுவலர் (சிஐஓ) ஆனந்த் ஷா தெரிவித்தார்.
நடப்பாண்டில் இதுவரை ரூ.79,768 கோடிக்கு அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு (பங்குச் சந்தை மற்றும் கடன்சந்தை) வந்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 8348,8318,8270
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8378,8398,8430
01-Jul-2015Details
Bonus
Relaxo Footwears Ltd
AGM
Oberoi Realty Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.