7/10/2016... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை சந்தித்தன. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக நேற்று முன்தினம் பங்குச்சந்தைகள் சற்று உயர்வுடன் இருந்த நிலையில் கடந்த இருதினங்களாக பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் துவங்கியதால் வர்த்தகம் உயர்வுடன் இருந்தன. இருப்பினும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததாலும் வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 34 புள்ளிகள் சரிந்து 8709 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 12புள்ளிகள் சரிந்து நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8699 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கமாடிட்டி ஆப்ஷன் வர்த்தகத்துக்கு `செபி’ அனுமதி அளித்துள்ளது. தவிர, வைரம், டீ, முட்டை, கோக்கோ, வார்ப்பு இரும்பு மற்றும் வெண்கலம் ஆகிய ஆறு புதிய கமாடிட்டிகளுக்கு `செபி’ அனுமதி வழங்கி இருக்கிறது. இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட கமாடிட்டிகளின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.
முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தை அமைப்புகள் ஆப்ஷன் வர்த்தகம் மற்றும் புதிய கமாடிட்டிகளை சேர்க்குமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தன. அதனை அடுத்து செபி இந்த அனுமதியை வழங்கியதால் முதலீட்டாளர்கள் இந்த முடிவை வரவேற்றிருக்கின்றனர்.
கமாடிட்டி பிரிவில் இதுவரை பியூச்சர் வர்த்தகத்துக்கு மட்டுமே `செபி’ அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஆப்ரிக்காவை உள்ளடக்கிய, இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்தியத்தில், இந்தியா, மிக அதிகளவில் பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு, 180 கோடி டாலர் திரட்டியுள்ளது’ என, ‘யர்னஸ்ட் அண்ட் யங்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம் :முதலீட்டாளர்களிடையே, இந்திய பொருளாதாரம் குறித்த நம்பிக்கை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவையும், இந்த நம்பிக்கைக்கு வலு சேர்த்துள்ளன. இதன் காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் மேற்கொள்ளும் புதிய பங்கு வெளியீடுகளில், முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் முதலீடு செய்து வருகின்றனர்.
500 கோடி டாலர்இதனால், இந்தாண்டு துவங்கி இதுவரை, பி.எஸ்.இ., எனப்படும், மும்பை பங்குச்சந்தை; என்.எஸ்.இ., என அழைக்கப்படும், தேசிய பங்குச்சந்தை ஆகியவற்றில், 56 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு, 180 கோடி டாலர் திரட்டியுள்ளன. இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்தியத்தில், இந்திய பங்குச்சந்தைகள் தான், மிக அதிகளவில், புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு உள்ளன. ஜூலை – செப்., 29 வரையிலான காலத்தில், மும்பை பங்குச்சந்தை மற்றும் அதன் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான பிரிவில், 15 புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதே காலத்தில், லண்டன் பங்குச்சந்தை மற்றும் அதன் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான பிரிவில், ஏழு புதிய பங்கு வெளியீடுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பல நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், சராசரியாக, 10 கோடி டாலருக்கு மேல் திரட்டியுள்ளன. அதனடிப்படையில், இந்தாண்டு இறுதிக்குள், பங்கு வெளியீடுகளில், 500 கோடி டாலருக்கு மேல் திரட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வலிமையான பொருளாதாரம்
உலக நாடுகளில், புதிய பங்கு வெளியீடுகள் தேக்கம் கண்டுள்ள நிலையில், இந்தியா வளர்ச்சி கண்டு வருவது பாராட்டத்தக்கது. இந்தாண்டு, இதுவரை, சர்வதேச அளவில் புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 7,940 கோடி டாலர் திரட்டப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில்திரட்டப்பட்டதை விட, 39 சதவீதம் குறைவாகும். அது போல, புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கையும், 23 சதவீதம் சரிவடைந்து, 704 ஆக குறைந்துள்ளது. இந்தியாவின் வலிமையான பொருளாதாரம், நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு ஆகியவை காரணமாக, கடந்த ஆண்டை விட, 2017ல், அதிகளவில் புதிய பங்கு வெளியீடுகள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நிப்டி சப்போர்ட் 8500,8400
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8650,8740
7 october details
டிவிடெண்ட்
----
results
south bank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM