அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!
இரத்தம் சுத்தமாகும்
அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, இரத்தம் சுத்தமாகும்.
நோயெதிர்ப்பு சக்தி
அன்னாசியில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும். இதனால் உடலில் நோய்களின் தாக்கம் குறையும்.
செரிமானம்
செரிமான பிரச்சனை இருந்தால், ஒரு கப் அன்னாசிப் பழத்தை சாப்பிடுங்கள். இதனால் உடனே உங்கள் செரிமான பிரச்சனை நீங்கும்.
எலும்புகளை வலிமையடையும்
அன்னாசிப்பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அவை எலும்புகளை வலிமையாக்குவதோடு, இணைப்புத் திசுக்களையும் வலிமையாக்கும். ஒரு கப் அன்னாசிப்பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான 73% மாங்கனீசு நிறைந்துள்ளது.