20/4/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 5 நாட்களாக சரிவுடன் முடிந்த நிலையில் (ஏப்., 19-ம் தேதி) சிறிது உயர்வுடன் முடிந்தன. வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச்சந்தைகள் அவ்வப்போது சரிந்தன. இருப்பினும் வர்த்தகநேர முடிவில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 17.47 புள்ளிகள் உயர்ந்து 29,336.57-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 1.65 புள்ளிகள் உயர்ந்து 9,103.50-ஆகவும் நிறைவுற்றன.
நேற்றைய நிப்டி 1 புள்ளிகள் உயர்வுடன் 9103 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 118 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 5 புள்ளிகள் சரிவுடன் 9098 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டிசிஎஸ் லாபம் ரூ. 6,608 கோடி.
டாடா குழும நிறுவனங்களுள் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 4.2 சதவீதம் உயர்ந்து ரூ. 6,608 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 6,340 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் 4-ம் காலாண்டு நிகர லாபம் ரூ. 6,662 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந் தது. ஆனால் நிறுவன லாபம் அதைவிட குறைந்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக ராஜேஷ் கோபிநாதன் பொறுப்பேற்ற பிறகு நிறுவனம் வெளியிடும் முதல் காலாண்டு அறிக்கை இதுவாகும். நிறுவனத் தின் வருமானம் 0.3 சதவீதம் சரிந்து ரூ. 29,642 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ஈட்டிய வருமானம் ரூ. 29,945 கோடியாகும்.
ஒரு பங்குக்கு ரூ. 27.50 டிவிடெண்ட் அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெனரல் இன்சூரன்ஸ் பங்கு வெளியீடு
பொது காப்பீட்டு துறையில், முதல் நிறுவனமாக, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், விரைவில் பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.
மத்திய அரசு, வரும் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், தான் கொண்டுள்ள பங்குகளில், குறிப்பிட்ட சதவீதத்தை விற்று, 72,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது. அதில், பொதுத் துறையைச் சேர்ந்த, நான்கு காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் மட்டும், 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது.அதன்படி, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியன்டல், யுனைடெட், நேஷனல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு வெளியீட்டுக்கு, மத்திய அமைச்சரவை, கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், பொதுத் துறை நிறுவனங்களில், முதல் நிறுவனமாக, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், விரைவில், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. ஜி.ஐ.சி., பங்கு வெளியீட்டு பணிகளை மேற்கொள்ள, எட்டு நிறுவனங்களை நியமித்துள்ளது.
அயு பைனான்சியர்ஸ், பி.எஸ்.பி., புராஜக்ட்ஸ் நிறுவனங்கள், விரைவில், பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.
நிப்டி சப்போர்ட் 9080,9055
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9125,9145
20 apr
spilits
----
divident
---
results
mindtree
cyient
hindzinc
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM