07/08/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடனே முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து முக்கிய நிறுவன பங்குகளின் விலை ஏற்றத்தாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும் வர்த்தகம் உயர்வுடனேயே முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 20 புள்ளிகள் உயர்ந்து 8588 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 120 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8558 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
மேரிகோ லாபம் ரூ. 238 கோடி
எப்எம்சிஜி பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மேரிகோ நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 238 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்தை விட 28 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.185.27 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் நிகர வருமானம் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1,781 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ.1,619 கோடியாக இருந்தது. இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகம் 4 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. நிறுவனத்தின் மொத்த செலவு ரூ.1,478 கோடியாகும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 7.38 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் செலவு ரூ. 1,376 கோடியாக இருந்தது.
கனரா வங்கி லாபம் 41% சரிவு
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி ஜூன் காலாண்டு லாபத்தில் 41 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. வங்கி ஈட்டிய லாபம் ரூ. 478 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ. 806 கோடியாக இருந்தது.
முதல் காலாண்டில் வங்கி சில அவசர தேவைகளுக்காக ஒதுக்கிய தொகை ரூ.1,359 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஒதுக்கிய தொகையைக் காட்டிலும் 72 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கி ஒதுக்கிய தொகை ரூ. 788 கோடியாகும்.
இதே காலத்தில் வங்கியின் வருமானம் ரூ.12,252 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.11,728 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் வாராக் கடன் அளவு 3.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வாராக்கடன் அளவு 2.67 சதவீதமாக இருந்தது.
ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பதற்காக ரூ. 151 கோடியை ஒதுக்கியுள்ளது.
இமாமி லாபம் 24% உயர்வு
எப்எம்சிஜி பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இமாமி நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் 24 சதவீதம் அதிகரித்து ரூ. 87.75 கோடியைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் 70.81 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் நிகர விற்பனை வருமானம் 22 சதவீதம் அதிகரித்து ரூ. 589 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ.481 கோடியாகும். ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் உள்நாட்டு வர்த்தகம் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல வெளிநாட்டு வர்த்தகம் 21 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிறுவனத்தின் இயக்குநர் மோகன் கோயங்கா தெரிவித்துள்ளார்.
முதல் காலாண்டில் இந்நிறுவனம் கேஷ் கிங் எனும் பிராண்டை ரூ.1,684 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது. இதற்காக நிறுவனம் ரூ.950 கோடியை கடனாகத் திரட்டியது. எஞ்சிய தொகையை நிறுவனத்தின் உள் வள ஆதாரம் மூலம் திரட்டப்பட்டுள்ளது.
டாடா கெமிக்கல்ஸ் லாபம் 13% சரிவு
டாடா குழும நிறுவனங்களில் ஒன்றான டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் லாபம் ஜூன் காலாண்டில் 13 சதவீதம் சரிந்து ரூ. 153 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 175 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் வருமானம் ரூ.4,079 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.3,871 கோடியாக இருந்தது.
நிர்வாகச் செலவுகள் அதிகரித்ததால் நிறுவனத்தின் லாபம் குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலாண்டில் செலவு ரூ. 3,690 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் செலவுத் தொகை ரூ.3,452 கோடியாக இருந்தது.
சோடா ஆஷ் உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது பெரிய நிறுவனமாக இது திகழ்கிறது. இந்நிறுவனம் உரம், ரசாயனப் பொருள்கள் தவிர சமையல் உப்பையும் தயாரிக்கிறது. பருப்பு, கடலை மாவு மற்றும் வாசனைப் பொருள்கள் விற்பனையிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அயோடின் உப்பு விற்பனையில் இந்நிறுவனத் தயாரிப்பு முதலிடத்தில் உள்ளது.
நிப்டி சப்போர்ட் 8580,8550,8520
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8610,8640
07-Aug-2015Details
Dividends
HCL Technologies Ltd
Hindustan Copper Ltd
IndusInd Bank Ltd
LIC Housing Finance Ltd
Board Meetings
Bharat Heavy Electricals Ltd
Corporation Bank
Cox & Kings Ltd
Finolex Industries Ltd
Future Retail Ltd
Gateway Distriparks Ltd
Grasim Industries Ltd
Gujarat State Petronet Ltd
Kalpataru Power Transmission Ltd
Kirloskar Oil Engines Ltd
Mahindra & Mahindra Ltd
Neyveli Lignite Corporation Ltd
Ratnamani Metals & Tubes Ltd
Repco Home Finance Ltd
Rural Electrification Corporation Ltd
Shilpa Medicare Ltd
SML ISUZU Ltd
Sobha Ltd
Take Solutions Ltd
Tata Motors Ltd
Tata Motors-DVR
AGM
Gateway Distriparks Ltd
HeidelbergCement India Ltd
Kirloskar Oil Engines Ltd
Mahindra & Mahindra Ltd
Monsanto India Ltd
Techno Electric & Engineering Company L
Trent Ltd
Results
Bharat Heavy Electricals Ltd
Corporation Bank
Cox & Kings Ltd
Finolex Industries Ltd
Future Retail Ltd
Gateway Distriparks Ltd
Grasim Industries Ltd
Gujarat State Petronet Ltd
Kalpataru Power Transmission Ltd
Kirloskar Oil Engines Ltd
Mahindra & Mahindra Ltd
Neyveli Lignite Corporation Ltd
Ratnamani Metals & Tubes Ltd
Repco Home Finance Ltd
Rural Electrification Corporation Ltd
Shilpa Medicare Ltd
SML ISUZU Ltd
Sobha Ltd
Take Solutions Ltd
Tata Motors Ltd
Tata Motors-DVR
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.