13/07/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது..நேற்றைய நமது நிப்டி 32 புள்ளிகள் உயர்ந்து 8360 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 211 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 270 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8350 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கிரீஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடு களில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளால் எங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் தெரிவித்துள் ளது. கடந்த வருடத்தின் ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது ஐரோப்பா சார்ந்த வருமானம் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.
எங்களைப் பொறுத்தவரை சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையோ கிரீஸில் ஏற்பட்டுள்ள நெருக்கடியோ எங்களை பாதிக்காது என்று டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி என்.சந்திரசேகரன் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் அனைத்து இடங்களிலும், அனைத்து துறைகளிலும் நாங்கள் வளர்ந்து வருகிறோம். கிரீஸ் மற்றும் சீனா பிரச்சினை முதலீட்டாளர்களுக்கு கவலைதரும் விஷயமாக இருக்கலாமே தவிர எங்களுக்கு அல்ல. தவிர அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் எங்களது முக்கிய வர்த்தகம் இருக்கிறது. இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவிலிருந்து கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவாகும் என்றார். டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியானது. முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த நிகர லாபம் 2.08 சதவீதம் உயர்ந்து ரூ.5,684 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் மொத்த நிகர லாபம் ரூ.5,568 கோடியாக இருந்தது.
சந்தை எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்பவே டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வந்தி ருக்கிறது. நிறுவனத்தின் மொத்த வருமானம் 16.08 சதவீதம் உயர்ந்து ரூ.25,668 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.22,111 கோடியாக நிறுவனத்தின் வருமானம் இருக்கிறது.
முக்கிய சந்தையான வட அமெரிக்காவில் தேவை அதிகரித்து வருகிறது. முக்கிய பிரிவுகளாக நிதிச் சேவைகள், ரீடெய்ல், லைப் சயின்ஸஸ் ஆகிய துறைகளில் முதல் காலாண்டு வளர்ச்சி இருந்ததாக டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.சந்திரசேகரன் தெரிவித்தார். மேலும் தற்போது முக்கியமான துறைகளில் முதலீடுகள் செய்திருக்கிறோம். இவை நடப்பு நிதி ஆண்டில் நல்ல வளர்ச்சியை கொடுக்கும் என்றார்.
ஒரு ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு 5.50 ரூபாய் இடைக்கால டிவிடெண்டாக நிறுவனம் அறிவித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8350,8325,8280
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8375,8385,8410
13-Jul-2015Details
Board Meetings
IndusInd Bank Ltd
Reliance Industrial Infrastructure Ltd
AGM
Havells India Ltd
IndusInd Bank Ltd
Pfizer Ltd
Results
IndusInd Bank Ltd
Reliance Industrial Infrastructure Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.