** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 26 October 2015

26/10/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 ஏற்றத்துடன் ஆரம்பித்த இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனேயே முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், ரூபாயின் மதிப்பில் காணப்பட்ட உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நேற்றைய வர்த்தகம் துவங்கும்போதே ஏற்றத்துடன் துவங்கின. தொடர்ந்து உயர்வுடனேயே இருந்த பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனேயே முடிவுற்றன.
நேற்றைய நமது நிப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 8295 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 157 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 250 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8325 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8300,8270
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8320,8350
எல் அண்ட் டி பைனான்ஸ் நிகர லாபம் 18% உயர்வு
எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 18 சதவீதம் உயர்ந்து 215 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 181 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
அதே சமயம் கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் 1,586 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் தற்போது 1,837 கோடி ரூபாயாக இருக்கிறது. நிறுவனத்தின் கடன் வழங்கும் விகிதம் 19 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 42,762 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது 50,986 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. கடன் வழங்கும் விகிதத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக நிறுவனத்தின் தலைவர் வொய்.எம்.தியோஸ்தாலே தெரிவித்தார். இதே வளர்ச்சியை வரும் காலத்திலும் அடைய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் 68.55 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
ஜிசிபிஎல் நிகர லாபம் 22% உயர்வு
கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (ஜிசிபிஎல்) நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 22 சதவீதம் உயர்ந்து 287 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 234 கோடி ரூபாயாக இருந்தது.
செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் 8.97 சதவீதம் உயர்ந்து 2,244 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,060 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் சர்வதேச விற்பனை வருமானம் 15 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 28 சதவீதம் உயர்ந்து 486 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 377 கோடி ரூபாயாக இருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை 9.97 சதவீதம் உயர்ந்து 4,342 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3,948 கோடி ரூபாயாக இருந்தது.
நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் இதே அளவிலான வளர்ச்சி இருக்கும் என்று நிறுவனத்தின் தலைவர் ஆதி கோத்ரெஜ் தெரிவித்தார். தவிர இந்த பிரிவுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது என்றார்.
டிவிடெண்ட்
இதற்கிடையே நிறுவனத்தின் இயக்குநர் குழு இரண்டாவது இடைக்கால டிவிடெண்டை அறிவித்துள்ளது. ஒரு ரூபாய் முக மதிப்புள்ள பங்குக்கு 100 சதவீத டிவிடெண்ட் வழங்கப்பட்டுள்ளது..
26-Oct-2015Details
Board Meetings
Advanta Ltd
Bharti Airtel Ltd
Blue Star Ltd
Entertainment Network (India) Ltd
Himachal Futuristic Communications Ltd
Hitachi Home & Life Solutions (India) L
Housing Development Finance Corporation
Inox Wind Ltd
Navneet Education Ltd
State Bank of Mysore
Sterlite Technologies Ltd
UPL Ltd
Wonderla Holidays Ltd
AGM
Gillette India Ltd
Results
Advanta Ltd
Bharti Airtel Ltd
Blue Star Ltd
Entertainment Network (India) Ltd
Himachal Futuristic Communications Ltd
Hitachi Home & Life Solutions (India) L
Housing Development Finance Corporation
Inox Wind Ltd
Navneet Education Ltd
State Bank of Mysore
Sterlite Technologies Ltd
UPL Ltd
Wonderla Holidays Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை 
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
 உரை:
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.
Translation:
In action be thou, 'ware of act's defeat; 
The world leaves those who work leave incomplete!.
Explanation:
Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.