** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 9 January 2017

9/1/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருந்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் நேற்றைய பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிவை சந்தித்தன. வர்த்தக நேர முடிவில் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 119.01 புள்ளிகள் சரிந்து 26,759.23 புள்ளிகளாகவும், நிப்டி 30 புள்ளிகள் சரிந்து 8243.80 புள்ளிகளாகவும் உள்ளன. 
காலை நேர வர்த்தகத்தின் போது மீண்டும் 8300 புள்ளிகளை எட்டிய நிப்டி, பிற்பகல் வர்த்தகத்தில் போது மீண்டும் சரிந்தது. தொழில்துறை நிறுவன பங்குகளின் சரிவு, முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருவது, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததால் அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது.
நேற்றைய நிப்டி 30 புள்ளிகள் சரிவுடன் 8244 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 64 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8254 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கடந்த ஐந்து வருடங்களில் அதிக லாபத்தை கொடுத்த நிறுவனங்களின் பட்டியலை மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் ஆய்வு மூலம் வெளியிட்டிருக்கிறது. இந்த பட்டி யலில் டிசிஎஸ் நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து நான்காவது வருடமாக டிசிஎஸ் முதல் இடத்தில் இருக்கிறது.
முதல் 100 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.28.4 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்திருக் கிறது. இரண்டாவது இடத்தில் ஹெச்டிஎப்சி வங்கி இருக்கிறது. கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனங்களை இணைத்தல், பிரித்தல், புதிய பங்குகள் வெளி யீடு, பங்குகளை திரும்ப வாங்கு தல் ஆகிய அனைத்து பிரிவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டே இந்த பட்டியல் தயாரிக்கப்பட் டிருப்பதாக மோதிலால் ஆஸ்வால் தெரிவித்திருக்கிறது.
அஜந்தா பார்மா நிறுவனம் வேக மாக வளர்ந்த நிறுவனமாகவும், ஏசியன் பெயின்ட்ஸ் தொடர்ந்து சீராக வளர்ந்து வரும் நிறுவன மாகவும் கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த ஐந்து வருட காலத்தில் அஜந்தா பார்மாவின் சந்தை மதிப்பு 53 மடங்கு உயர்ந்துள்ளது. துறை வாரியாக பார்க்கும் போது கன்ஸ் யூமர் / ரீடெய்ல் ஆகிய துறை இரண்டாவது ஆண்டாக நல்ல வரு மானத்தை கொடுத்திருக்கிறது. மெட்டல் மற்றும் சுரங்கத்துறை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன.
முதல் 100 நிறுவனங்களின் பட்டியலில் ஏழு பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இருக் கின்றன. பிபிசிஎல், ஹெச்பிசிஎல், பெட்ரோநெட் எல்என்ஜி, கான்கர், எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளன.
கடந்த ஐந்து வருடங்களில் சென்செக்ஸ் ஆண்டுக்கு 5 சதவீத வளர்ச்சி மட்டுமே கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த பட்டியலில் உள்ள நிறுவனங்கள் சராசரியாக 18 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. சந்தை எப்போது சரியும் என்று கணிப்பதை விட இது போன்ற பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம் என மோதிலால் ஆஸ்வால் தெரிவித்துள்ளது.
நேற்றைய பங்கு சந்தை வர்த்தக முடிவில் ஐடி நிறுவன பங்குகள் அதிகபட்சம் 4 சதவீதம் சரிவைக் கண்டன.
நேற்று முன்தினம் ஹெச் 1 பி விசா மசோதா திருத்தங்களுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் அயல்நாட்டு ஊழியர்கள் மற்றும் அயல்நாட்டு வர்த்தகம் தொடர்பான திருத்தங்கள் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்திய ஐடி நிறுவன பங்குகள் சரிவைக் கண்டன.
இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு 2.50 சதவீதமும், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு 2.18 சதவீதமும், விப்ரோ நிறுவனத்தின் பங்கு 2.18 சதவீதமும் சரிவைக் கண்டன. ஐடி துறை குறியீடு 2.54 சதவீதம் குறைந்து 9,880.61 புள்ளியில் நிறைவடைந்தது.
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜி ஆகிய நான்கு நிறுவனங்களின் சந்தை மதிப்பு நேற்று ரூ.22,000 கோடி அளவுக்கு சரிந்தது
நிப்டி சப்போர்ட் 8211,8187
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8288,8333
9 jan details
divident
result
8k miles
bonus

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 125000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக 
நல்குரவு என்னும் நசை.
 உரை:
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.
Translation:
Importunate desire, which poverty men name, 
Destroys both old descent and goodly fame.
Explanation:
Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech.


 Image may contain: one or more people, text and outdoor