** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 16 November 2017

16/11/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தன.
கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்தது, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வர்த்தக பற்றாகுறை ஏற்பட்டுள்ளது போன்ற காரணங்களால் வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து அந்த சரிவு நாள் முழுக்க நீடிக்க, வர்த்தகம் சரிவுடனேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 68 புள்ளிகள் சரிவுடன் 10118 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 138 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 10138 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
கேவிபி லாபம் ரூ.76 கோடி.
கரூர் வைஸ்யா வங்கியின் (கேவிபி) செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 40 சதவீதம் சரிந்து 76 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.126 கோடியாக நிகர லாபம் இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,610 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.1,632 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 4.83 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 2.29 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடனும் 1.44 சதவீதத்தில் இருந்து 3.24 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிகரலாபம் ரூ 273 கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டு முதல் அரையாண்டில் சரிந்து ரூ.224 கோடியாக இருக்கிறது. செப்டம்பர் காலாண்டில் வங்கியின் மொத்த வணிகம் லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. செப்டம்பர் முடிவில் ரூ.1,00,637 கோடியாக மொத்த வணிகம் இருக்கிறது.
பேங்க் ஆப் பரோடா நிகர லாபம் 36% சரிவு
பேங்க் ஆப் பரோடாவின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 36 சதவீதம் சரிந்து ரூ.355 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.552 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருமானம் 8.58 சதவீதம் உயர்ந்து ரூ.3,270 கோடியாக இருக்கிறது.
வங்கியின் வாராக்கடன் நிலைமை சிறிதளவு மேம்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 11.40 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன், இரண்டாம் காலாண்டில் 11.16 சதவீதமாக குறைந்திருக்கிறது. வங்கியின் நிகர வாராக்கடன் 5.46 சதவீதத்தில் இருந்து 5.05 சதவீதமாக சரிந்திருக்கிறது. வங்கியின் மொத்த வருமானம் 3.68% உயர்ந்து ரூ.12,490 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.12,047 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வணிகம் 9.71 லட்சம் கோடியாக இருக்கிறது. இதில் டெபாசிட்களின் பங்கு ரூ.5.83 லட்சம் கோடியாகும். நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 1.31% உயர்ந்து முடிந்தது.
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா நஷ்டம் ரூ.345 கோடி
பொதுத்துறை வங்கியான யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் நஷ்டம் (செப்டம்பர் காலாண்டு) ரூ.344.83 கோடியாக இருக்கிறது. வாராக்கடனுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதால் நஷ்டம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.43.53 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஜூன் காலாண்டில் ரூ.211 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்த வாராக்கடன் 16.26 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 18.80 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நிகர வாராக்கடன் 11.19 சதவீதத்தில் இருந்து 11.63 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வாராக்கடனு க்கு ஒதுக்கீடு செய்த தொகை அதிகமாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.469 கோடியாக இருந்த ஒதுக்கீடு, தற்போது ரூ. 876 கோடியாக அதிகரித்திருக்கிறது.நேற்றைய வர்த்தகத்தில் பங்கு விலை 2.78% சரிந்து முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 10080,10040
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10160,10210
16 nov
bonus
---
divident
bharatforge
nilkamal

results
gati
SPILITS
-----

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 170000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
 உரை:
ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.
Translation:
My friend, I went prepared to show a cool disdain;
My heart, forgetting all, could not its love restrain.
Explanation:
O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.

No automatic alt text available.