** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 1 September 2017

1/09/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
காலையில் சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் பிற்பகலில் ஏற்றம் பெற துவங்கின. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் ஆகஸ்ட் மாத நிகரலாபம் உயர்ந்திருப்பதாக அறிவித்தன.
இதனையடுத்து பிற்பகலில் இந்திய பங்குச்சந்தைகள் ஏறுமுகத்திற்கு திரும்பின. 
நேற்றைய நிப்டி 33 புள்ளிகள் உயர்வுடன் 9918 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 55 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9938  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
டாடா ஸ்டீல் நிகர லாபம் ரூ.921 கோடி
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் ரூ.921 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,183 கோடியாக நிறுவனத்தின் நஷ்டம் இருந்தது. நிறுவனம் லாப பாதைக்கு திரும்பி இருந்தாலும் சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் சராசரியாக ரூ.1,043 கோடி லாபம் இருக்கும் என வல்லுநர்கள் கணித்தனர் அதேபோல ஜூன் காலாண்டில் வருமானம் 19.30 சதவீதம் உயர்ந்து ரூ.30,973 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.25,970 கோடியாக வருமானம் இருந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 12% உயர்வு
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.343 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.306 கோடியாக நிகர லாபம் இருந்தது.வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறைந்திருப்பதால் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வருமானம் 7.36 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் ரூ.13,475 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.14,468 கோடியாக இருக்கிறது. மொத்த வாராக்கடன் சிறிதளவு குறைந்து 13.66 சதவீதமாக இருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 9.16 சதவீதத்தில் இருந்து 8.67 சதவீதமாக குறைந்திருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 19 சதவீதம் குறைந்து ரூ.2,559 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,165 கோடி ஒதுக்கப்பட்டது
யெஸ் வங்கிநிகர லாபம்32% உயர்வு
தனியார் வங்கியான யெஸ் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 32 சதவீதம் உயர்ந்து உயர்ந்து ரூ.965 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.731 கோடியாக நிகர லாபம் இருந்தது. 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்குகள் 2 ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளாக பிரிக்க (1:5 விகிதம்) இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
மொத்த வருமானம் ரூ.5,785 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.4,762 கோடியாக மொத்த வருமானம் இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.79 சதவீதத்தில் இருந்து 0.97 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஹெச்யுஎல்நிகர லாபம் 9% உயர்வு
எப்எம்சிஜி துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 9 சதவீதம் உயர்ந்து ரூ.1,283 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,174 கோடியாக நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர விற்பனை 5 சதவீதம் உயர்ந்து ரூ.9,094 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.8,662 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் முக்கியமான பிராண்டான சர்ஃப் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் நிறுவனத்தின் தண்ணீர் பிரிவில் பெரிய வளர்ச்சி இல்லை. தவிர ஜிஎஸ்டி -க்கான ஆயத்த பணிகளின் தாக்கம் கடந்த காலாண்டில் எதிரொலித்ததாக நிறுவனம் தெரிவித்தது.
கனரா வங்கிநிகர லாபம்10% உயர்வு
பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் நிகர லாபம் 9.9 சதவீதம் உயர்ந்து ரூ.251.60 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.228.95 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.11,786 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.12,304 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஆனால் வாராக்கடன் அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த வாராக்கடன் 10.56 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 7.09 சதவீதமாகவும் இருக்கிறது. வாராக்கடனுக்கு ஒதுக்கீடு செய்த தொகையும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.1,468 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.2,270 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9876,9832
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9940,9975
1 sep details
டிவிடெண்ட்
dilip buildcon
results
----
spilit
-----
BONUS
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 152000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1251

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் 
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
 உரை: 

காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது.

Translation: 
The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.
Explanation: 
My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.


No automatic alt text available.