6/7/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 24 புள்ளிகள் உயர்வுடன் 9637 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 1 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9647 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
காலாண்டு முடிவுகள்:
எம் அண்ட் எம் நிகர லாபம் 20% உயர்வு
ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 20 சதவீதம் உயர்ந்து ரூ.725 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.604 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 23 சதவீதம் உயர்ந்து ரூ.3,955 கோடியாக இருக்கிறது.
மொத்த வருமானம் 4 சதவீதம் உயர்ந்து ரூ.12,319 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் வருமானம் ரூ.48,438 கோடியாக இருக்கிறது.
கடந்த மார்ச் காலாண்டில் 1,30,778 வாகனங்களை இந்த நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. பிஎஸ் 3 வாகன தடை காரணமாக 171 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பங்குக்கு 13 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
எல் அண்ட் டி லாபம் 29.5% உயர்வு
கட்டுமானத் துறையை சேர்ந்த எல் அண்ட் டி நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 29.50 சதவீதம் உயர்ந்து ரூ.3,025 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ. 2,335 கோடி நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.36,827 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.32,875 கோடியாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 7.88 சதவீதம் உயர்ந்து ரூ.1,10,011 கோடியாக இருக்கிறது.
மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி இந்த நிறுவனத்தின் வசம் ரூ.2,61,341 கோடி அளவுக்கு ஆர்டர்கள் உள்ளன. போனஸ் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. இரு பங்குகளுக்கு ஒரு பங்கினை போனஸ் வழங்க பரிந்துரை செய்திருக்கிறது.
சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 15% உயர்வு
தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 14.8 சதவீதம் உயர்ந்து ரூ.129 கோடியாக உள்ளது. 2015-16-ம் ஆண்டு இதே காலத்தில் ரூ.112.2 கோடியாக இருந்தது.
அதே சமயத்தில் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் முதல் முறையாக ரூ.500 கோடியை தாண்டியிருக்கிறது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.503 கோடியாக இருந்தது. முந்தைய நிதி ஆண்டில் (2015-16) ரூ.445 கோடியாக நிகர லாபம் இருந்தது.
கடன் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் எங்களுடைய வாராக்கடன் பல காலாண்டுகளாக தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது என வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி என்.காமகோடி தெரிவித்தார். ஒரு பங்குக்கு 30 பைசா டிவிடெண்ட் வழங்கவும், 10 பங்குகளுக்கு ஒரு பங்கினை போனஸாக வழங்கவும் இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
அப்போலோ ஹாஸ்பிட்டல் நிகர லாபம் 40% சரிவு
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 40 சதவீதம் சரிந்து ரூ.48.16 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.81.31 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது. கடந்த காலாண்டில் செலவுகள் அதிகரித்ததால் நிகர லாபம் குறைந்திருக்கிறது.
அதே சமயத்தில் நிறுவனத்தின் வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.1,670 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,457 கோடியாக இருந்தது.
ரூ.1,358 கோடியாக இருந்த செலவுகள், இந்த ஆண்டு ரூ.1,612 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டிலும் நிகர லாபம் 14 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.333.95 கோடியாக இருந்த நிகர லாபம், தற்போது ரூ.285 கோடியாக சரிந்திருக்கிறது.
ஒரு பங்குக்கு ரூ.6 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9615,9593
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9650,9666
6 july
bonus
pc jewel
divident
axisbank
bata
bajajauto
bajajfin
karnataka bank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 144000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM