** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 11 September 2015

நைட்ரஜன் வாயு நிரப்புவதன் அவசியம் என்ன?
பொதுவாக நாம் பயன்படுத்தும் கார்களில் பெரும்பாலானவர்கள் டயரில் காற்றழுத்தம் குறைந்தால் காற்று நிரப்புவார்கள். அது சாதாரண காற்றா அல்லது நைட்ரஜன் (என்2) காற்றா என்று பார்ப்பதில்லை.
கார்களின் டயர்களுக்கு நைட்ரஜன் வாயு நிரப்புவதால் ஏற்படும் நன்மைகள் பல.
 பொதுவாக காற்றானது வெப்பமாதலால் விரிவடையும் தன்மை உடையது. உதாரணமாக தொடர்ந்து நாம் காரை இயக்குவதால் டயரில் வெப்பம் அதிகரிக்கும்.
டயரில் வெப்பம் அதிகரிக்கும்போது, டியூபில் உள்ள காற்று வெப்பமடையும்போது அது விரிவடையும். அவ்வாறு விரிவடையும்போது டயரில் உள்ள நைலான் இழைகள் தளர்ந்து போகும்.
டயரில் உள்ள நைலான் இழைகள் தளர்ந்து விடும்போது ஒரு கட்டத்தில் டயரில் உள்ள காற்று விரிவடையும்போது டயர் வெடித்து வாகனம் விபத்துக்குள்ளாகும்.
 இதுமாதிரியான விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க தற்போது அனைத்து வாகனங்களிலும் நைட்ரஜன் காற்றை நிரப்புவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
 நைட்ரஜன் வாயுவின் சிறப்பு என்ன? நைட்ரஜன் வாயு எளிதில் வெப்பமடைவதில்லை. இதனால் டயர் வெப்பமடைவதைத் தடுக்கிறது. அவ்வாறு நைட்ரஜன் நிரப்பப்படும் வாகனங்களின் டயரின் வெப்பம் அதிகரித்தாலும் அதிலுள்ள காற்று எளிதில் வெப்பமடைவதில்லை. இதனால் காற்று விரிவடையாது.
காற்று விரிவடையாததால் டயரின் நைலான் இழைகள் தளர்வது குறையும். டயரின் ஆயுள் காலம் நீடிக்கும். இதனால் டயர் வெடிக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
 இதனால்தான் இப்போது அனைத்து வாகனங்களிலும் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுகின்றன.
11/09/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் இந்திய பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தன. நேற்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிப்டி 130 புள்ளிகளும் சரிவுடன் துவங்கின. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்டட சுணக்கம், முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததன் எதிரொலியாக இந்திய பங்குசந்தைகள் சரிந்தன. இருப்பினும் மதிய நேர வர்த்தகத்திற்கு பின்னர் முக்கிய நிறுவன பங்குகள் உயர்வால் பங்குசந்தைகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும் பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 30 புள்ளிகள் சரிந்து 7788 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 76 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 7828 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் தென் தமிழகத்தில் 6,600 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக ஹெச்சிஎல் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
எப்எம்சிஜி துறையை சேர்ந்த ஐடிசி நிறுவனம் 2,500 கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்ய இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தேவேஷ்வர் தெரிவித்தார்
ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது
தொழில் வளர்ச்சி மெதுவாக இருப்பது மற்றும் முதலீடுகள் குறைவது ஆகிய காரணங்களால் நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று மூடி’ஸ் தரச் சான்று நிறுவனம் கணித்திருக்கிறது.
ஆனால் கச்சா எண்ணெய் விலை சரிவினால் நடப்புக்கணக்கு பற்றாக்குறை குறை வாகவே இருக்கும் என்று கணிக் கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் பெரும் பாலான ஆசிய நாடுகளின் வளர்ச்சி விகிதத்தை மூடி’ஸ் குறைத்திருக் கிறது.
சர்வதேச வளர்ச்சி குறைந்தது மற்றும் சீனாவின் தேவை குறைவே இதற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் வளர்ச்சி 7 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் 7.5 சதவீத வளர்ச்சியும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 8 முதல் 8.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று மத்திய அரசு கணித்திருக்கிறது.
2012-ம் ஆண்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருந்தது. ஆனால் 2014-ம் ஆண்டில் 1.4 சதவீதமாக இருக்கிறது.
இந்த நிலையில் நடப்புக்கணக்கு பற்றாக் குறை நீடிக்கும். பருவமழை குறை வினால் உணவுப்பணவீக்கம் அதிகரிக்கும் சூழல் இருப்பதால் இப்போதைக்கு வட்டி குறைப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
2016-ம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. முன்ன தாக 6.5 சதவீதம் இருக்கும் என்று மூடி’ஸ் கணித்திருந்தது.
இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய பகுதிகளை தவிர்த்த ஆசியா பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி நடப்பாண்டில் 3 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் 3.2 சதவீதமாகவும் இருக்கும் என்று மூடி’ஸ் தெரி வித்தது.
இந்தியாவின் வளர்ச்சி 7.1%: யூபிஎஸ் கணிப்பு
ஸ்விஸ் நாட்டை சேர்ந்த தரகு நிறுவனமான யூபிஎஸ் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. முன்னதாக 7.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக் கப்பட்டிருந்தது.
2016-17ம் நிதி ஆண்டில் 7.6 சதவீத வளர்ச்சி (முன்னதாக 8.3% வளர்ச்சி) என்று கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதி ஆண்டில் 0.75 சதவீதம் அளவுக்கு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்ப்பதாக யூபிஎஸ் கூறியிருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7760,7700
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7820,7850,7900
11-Sep-2015Details
Dividends
IFCI Ltd
Board Meetings
eClerx Services Ltd
AGM
Oracle Financial Services Software Ltd
Swan Energy Ltd
12-Sep-2015Details
AGM
Jaiprakash Power Ventures Ltd
Repco Home Finance Ltd
Wockhardt Ltd
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 568
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் 
சீறிற் சிறுகும் திரு.
 உரை:
கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.
Translation:
Who leaves the work to those around, and thinks of it no more; 
If he in wrathful mood reprove, his prosperous days are o'er!.
Explanation:
The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.