** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 11 September 2015

நைட்ரஜன் வாயு நிரப்புவதன் அவசியம் என்ன?
பொதுவாக நாம் பயன்படுத்தும் கார்களில் பெரும்பாலானவர்கள் டயரில் காற்றழுத்தம் குறைந்தால் காற்று நிரப்புவார்கள். அது சாதாரண காற்றா அல்லது நைட்ரஜன் (என்2) காற்றா என்று பார்ப்பதில்லை.
கார்களின் டயர்களுக்கு நைட்ரஜன் வாயு நிரப்புவதால் ஏற்படும் நன்மைகள் பல.
 பொதுவாக காற்றானது வெப்பமாதலால் விரிவடையும் தன்மை உடையது. உதாரணமாக தொடர்ந்து நாம் காரை இயக்குவதால் டயரில் வெப்பம் அதிகரிக்கும்.
டயரில் வெப்பம் அதிகரிக்கும்போது, டியூபில் உள்ள காற்று வெப்பமடையும்போது அது விரிவடையும். அவ்வாறு விரிவடையும்போது டயரில் உள்ள நைலான் இழைகள் தளர்ந்து போகும்.
டயரில் உள்ள நைலான் இழைகள் தளர்ந்து விடும்போது ஒரு கட்டத்தில் டயரில் உள்ள காற்று விரிவடையும்போது டயர் வெடித்து வாகனம் விபத்துக்குள்ளாகும்.
 இதுமாதிரியான விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க தற்போது அனைத்து வாகனங்களிலும் நைட்ரஜன் காற்றை நிரப்புவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
 நைட்ரஜன் வாயுவின் சிறப்பு என்ன? நைட்ரஜன் வாயு எளிதில் வெப்பமடைவதில்லை. இதனால் டயர் வெப்பமடைவதைத் தடுக்கிறது. அவ்வாறு நைட்ரஜன் நிரப்பப்படும் வாகனங்களின் டயரின் வெப்பம் அதிகரித்தாலும் அதிலுள்ள காற்று எளிதில் வெப்பமடைவதில்லை. இதனால் காற்று விரிவடையாது.
காற்று விரிவடையாததால் டயரின் நைலான் இழைகள் தளர்வது குறையும். டயரின் ஆயுள் காலம் நீடிக்கும். இதனால் டயர் வெடிக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
 இதனால்தான் இப்போது அனைத்து வாகனங்களிலும் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுகின்றன.