** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 21 November 2016

21/11/2016... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
தொடர்ந்து நான்காவது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. ஜூன் மாதம் 27-ம் தேதிக்கு பிறகு நிப்டி 8100 புள்ளிகளுக்கு சரிந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி மற் றும் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்னும் அறிவிப்பு ஆகிய காரணங்களால் முதலீட் டாளர்கள் எச்சரிக்கையாக இருப்ப தால் சந்தையில் விற்கும் போக்கு தொடர்ந்து இருக்கிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்னும் அறிவிப்பு நடுத்தர காலத்தில் பொரு ளாதாரத்தில் எதிர்மறை விளைவு களை உருவாக்கும் என வல்லு நர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
 சுமார் 6 மாதங்களுக்கு பிறகு சென்செக்ஸ் 27, 000 புள்ளிகளுக்கு கீழாகவும், நிப்டி 8100 புள்ளிகளுக்கு கீழும் சரிந்துள்ளன
அமெரிக்க பெடரல் வங்கி அடுத்த மாதம் தனது வட்டி விகிதத்தை உயர்த்த கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதன் காரணமாக சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்து 68 என்ற நிலையை எட்டி உள்ளது. இதே போன்று இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெற்றதன் எதிரொலியாக பணம் டெபாசிட் செய்வது, பணம் எடுப்பது போன்றவைகளுக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் தங்கம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.
இது போன்ற பல்வேறு காரணங்களால் முக்கிய துறை பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து கடுமையாக சரிந்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
நேற்றைய நிப்டி 5 புள்ளிகள் சரிவுடன் 8074 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 35 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8084 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 11.5% சரிவு
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 11.5 சதவீதம் சரிந்து ரூ.549 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.621 கோடியாக இருந்தது. அதே சமயத்தில் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.13,701 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.14,218 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை 34.6 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.1,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இப்போது ரூ. 2,533 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 13.63 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் மொத்த வாராக்கடன் 6.36 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடன் 3.99 சதவீதத்தில் இருந்து 9.10 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
தேனா வங்கி நிகர நஷ்டம் ரூ.44 கோடி
பொதுத்துறை வங்கியான தேனா வங்கியின் நிகர நஷ்டம் ரூ.44 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.38.70 கோடியாக நிகர லாபம் இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.2,872 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.2,914 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 6.89 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 13.79 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 4.65 சதவீதத்தில் இருந்து 8.93 சதவீதமாக அதிகரித்திருக்கிறது
ரிலையன்ஸ் மொத்த நிகர லாபம் ரூ.7,833 கோடி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 18 சதவீதம் அதிகரித்து ரூ.7,704 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.6,534 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் மொத்த நிகர லாபம் 24 சதவீதம் சரிந்து ரூ.7,833 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.10,314 கோடியாக இருந்தது.
மொத்த வருமானம் ரூ. 66,198 கோடியில் இருந்து ரூ.66,624 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணையை சுத்திகரிப்பு செய்வதற்கு கிடைக்கும் தொகை 10.10 டாலராக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 10.60 டாலர் கிடைத்தது. கடந்த ஜூன் காலாண்டில் ஒரு பேரல் சுத்திகரிப்பதற்கு 11.5 டாலர் கிடைத்தது.
நிறுவனத்தின் வசம் 1,240 கோடி டாலர் ரொக்கம் இருக்கிறது. நிறுவனத்தின் கடன் 2,840 கோடி டாலராகும்.
யெஸ் வங்கி நிகர லாபம் 31% உயர்வு
தனியார் வங்கியான யெஸ் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 31.30 சதவீதம் உயர்ந்து ரூ.801.50 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.610.40 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் ரூ.3,995 கோடியில் இருந்து ரூ.4,982 கோடியாக உயர்ந்திருக்கிறது.
அதேபோல வாராக்கடன் அள வும் உயர்ந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.61 சதவீதத் தில் இருந்து 0.83 சதவீதமாக அதிக ரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.20 சதவீதத்தில் இருந்து 0.29 சதவீதமாக அதிகரித் திருக்கிறது. வாராக் கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையும் ரூ.103 கோடியில் இருந்து ரூ.161 கோடியாக அதிகரித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8040,8000
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8111,8166
21 nov details
divident

result
nalco
shopa ltd

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 
பகலும்பாற் பட்டன்று இருள்.
 உரை:
நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.
Translation:
To him who knows not how to smile in kindly mirth, 
Darkness in daytime broods o'er all the vast and mighty earth.
Explanation:
To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light.