** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 2 December 2016

2/12/2016... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
கடந்த 4 நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள்  பிற்பகல் வர்த்தகத்தின் போது மீண்டும் சரிவடைந்துள்ளது. காலை நேர வர்த்தகத்தின் போது 8200 புள்ளிகளுக்கு மேல் இருந்த நிப்டி, வர்த்தக நேர முடிவில் 8200 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது.  வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 92.89 புள்ளிகள் சரிந்து 26,559.92 புள்ளிகளாகவும், நிப்டி 31.60 புள்ளிகள் குறைந்து 8192.90 புள்ளிகளாகவும் உள்ளன.வங்கித்துறை மற்றும் தொலைத் தொடர்பு துறை பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதன் காரணமாகவே நிப்டி மீண்டும் சரிய துவங்கியதாக கூறப்படுகிறது.
நேற்றைய நிப்டி 31 புள்ளிகள் சரிவுடன் 8192 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 68 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8172 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 82 சதவீதம் உயர்ந்து ரூ. 77 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.42 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் 11 சதவீதம் உயர்ந்து ரூ.738 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.660 கோடியாக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் 89 சதவீதம் உயர்ந்து ரூ.152 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ.80.67 கோடியாக இருந்தது. அதேபோல முதல் அரையாண்டில் வருமானமும் ரூ.1,292 கோடியில் இருந்து ரூ.1,451 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 1.70 ரூபாய் வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
நேற்று பங்குச்சந்தை சரிந்த போதிலும் இந்த பங்கு 4.5 சதவீதம் உயர்ந்து முடிந்தது. வர்த்தகத்தின் இடையே 9 சதவீதம் உயர்ந்து தன்னுடைய 52 வார உயர்ந்த பட்ச விலையான 355 ரூபாயை தொட்டது.
ஹெச்யுஎல் நிகர லாபம் 11.5% உயர்வு
எப்எம்சிஜி துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) நிறுவனத்தின் நிகர லாபம் 11.5 சதவீதம் உயர்ந்து ரூ.1,095 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் ரூ.982 கோடியாக இருந்தது.
மொத்த வருமானம் 1.57 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.8,348 கோடியாக இருந்தது. இப்போது ரூ.8,480 கோடியாக உயர்ந்திருக்கிறது. சவாலான சந்தையிலும் கூட நிறுவனம் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக தலைவர் ஹரீஷ் மன்வாணி தெரிவித்தார்.
பருவமழை சிறப்பாக இருக் கும் என்ற எதிர்பார்ப்பு இருப்ப தால், விற்பனையில் முன்னேற்றம் இருக்கும் என நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பிபி பாலாஜி தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் 10.6 சதவீதம் உயர்ந்து ரூ.2,269 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.2,051 கோடியாக இருந்தது. மேலும் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.7 வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
இண்டஸ்இந்த் வங்கி
தனியார் துறை வங்கியான இண்டஸ்இந்த் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 25.75 சதவீதம் உயர்ந்து ரூ.704 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.560 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,439 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.3,581 கோடி யாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.77 சதவீதத்தில் இருந்து 0.90 சதவீதமாக அதிகரித் திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.31 சதவீதத்தில் இருந்து 0.37 சதவீதமாக அதிகரித்தது.
வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.214 கோடி யாக அதிகரித்திருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 25.85 சதவீதம் உயர்ந்து ரூ.1,365.64 கோடியாக இருக்கிறது
நிப்டி சப்போர்ட் 8166,8144
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8234,8277
2 dec details
டிவிடெண்ட்

results
il & fs
tv today

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1010
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி 
வறங்கூர்ந் தனையது உடைத்து.
 உரை:
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.
Translation:
'Tis as when rain cloud in the heaven grows day, 
When generous wealthy man endures brief poverty.
Explanation:
The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).