** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 23 May 2017

23/5/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் ஆரம்பித்து உயர்வுடனேயே முடிந்தன. எந்தெந்த பொருட்கள் மீது எவ்வளவு ஜிஎஸ்டி., வரி விதிக்கப்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதுதொடர்பான விலை குறைய வாய்ப்பு இருப்பதால் எப்எம்சிஜி., தொடர்பான நுகர்பொருட்கள் தொடர்பான பங்குகள் அதிக ஏற்றம் கண்டன
நேற்றைய நிப்டி 10 புள்ளிகள் உயர்வுடன்  9438 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 85 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 9478  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
காலாண்டு முடிவுகள்: 
ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு வருவாய் ரூ.10,725 கோடி.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கனடா நாட்டைச் சேர்ந்த, பேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு. இந்நிறுவனம், பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 701.90 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 507.50 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனம் உள்நாட்டில் வசூலித்த மொத்த பிரீமியம் வருவாய், 32.6 சதவீதம் உயர்ந்து, 10 ஆயிரத்து, 725.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 
இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், 2016 – 17ம் ஆண்டில், 1.77 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 1.58 கோடியாக குறைந்திருந்தது. வாடிக்கையாளர் விரும்பும் வகையில், புதிய காப்பீட்டு திட்டங்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்படும். 
மாருதி நிகர லாபம் 16% உயர்வு
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 15.8 சதவீதம் உயர்ந்து ரூ.1,709 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,476 கோடியாக நிகர லாபம் இருந்தது. விற்பனை உயர்ந்தது, முழு உற்பத்தி திறனை எட்டியது, செலவுகளை குறைத்தது உள்ளிட்ட பல வகையாக நடவடிக்கைகளை எடுத்ததால் நிகர லாபம் உயர்ந்திருப்பதாக மாருதி தெரிவித்திருக்கிறது. நிகர விற்பனை 20.3 சதவீதம் உயர்ந்து ரூ.18,005 கோடியாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 38 சதவீதம் உயர்ந்து ரூ.7,337 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதேபோல நிகர விற்பனை 18.5 சதவீதம் உயர்ந்து ரூ.66,909 கோடியாக இருக்கிறது. ஒரு பங்குக்கு 75 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 40 சதவீதம் உயர்ந்து ரூ.976 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.695 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் 9.9 சதவீதமாக உயர்ந்து ரூ.5,434 கோடியாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் ரூ.4,947 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வாராக் கடன் சிறிதளவு உயர்ந்திருக் கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் 2.36 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன், தற்போது 2.59 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 1.06 சதவீதத்தில் இருந்து 1.26 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ 3,411 கோடியாக இருக்கிறது. ஒரு பங்குக்கு 0.60 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை வழங்கி இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9440,9400
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9510,9540
23 மே details
spilits
-----
DIVIDENTS
---------
results
central bank
century ply
enil
frl
jb chem
jindal stel
ncc
tatamotors
tatamtrdvr
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு 
நட்பினுள் ஆற்று பவர்.
 உரை: 
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?.
Translation: 
Who work us woe in friendship's trustful hour, 
What will they prove when angry tempests lower?.
Explanation: 
He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity ?.

Image may contain: text