10/07/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குசந்தைகள் நேற்றும் சரிவுடன் முடிந்தன. கீரிஸ் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, சீன பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவு போன்றவற்றால் இந்திய பங்குசந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. இந்தநிலையில் வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. ஆனால் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், ஆட்டோமொபைல், எண்ணெய் உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகளில் சரிவை சந்தித்தால் வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.சீன பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால், அதன் பாதிப்பு ஆசிய சந்தைகளிலும் எதிரொலித்தது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சீன பங்குச்சந்தைகள் சுமார் 30 சதவீதம் வரை சரிந்தன. சீன பங்குச்சந்தைகள் சரிவது கிரீஸ் பிரச்சினையைவிட பெரியதாக இருக்கும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் தெரிவித்திருக்கிறது.இந்த சரிவைத் தடுக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று என்று சீன அரசு தெரிவித்திருத்திருக்கிறது. சீனா இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் அதிகமாக முதலீடு செய்யப்படும் என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்தாலும் சரிவைத் தடுக்க முடியவில்லை.ஜூலை 15-ம் தேதி இரண்டாம் காலாண்டு ஜிடிபி எண்கள் வெளியாக இருக்கின்றன. 7 சதவீதத்துக்கு கீழே இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதினால் சீன பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தைகளும் தொடர்ந்து சரிந்தன.டாடா மோட்டார்ஸ் பங்கும் சரிவை சந்தித்தது. ஜாகுவார் லாண்ட்ரோவர் ஆகிய கார்களின் விற்பனையில் 20 சதவீதம் சீனா சந்தையில் இருப்பதால் இந்த பங்கு 6 சதவீதம் வரை சரிந்தது.
நேற்றைய பங்குச்சந்தை சரிவு காரணமாக 1.33 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருகிறது. இந்த சரிவு காரணமாக பி.எஸ்.இ.யில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1,02,55,829 கோடி ரூபாயாக இருக்கிறது
நேற்றைய நமது நிப்டி 34 புள்ளிகள் சரிந்து 8328 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 33 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 15 புள்ளிகள் உயர்வுடன் 8343 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8300,8273,8200
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8350,8377,8400
10-Jul-2015Details
Dividends
Bank of India
Blue Star Ltd
Capital First Ltd
CCL Products (India) Ltd
Dr Reddys Laboratories Ltd
Edelweiss Financial Services Ltd
JSW Energy Ltd
V I P Industries Ltd
Voltas Ltd
Board Meetings
GRUH Finance Ltd
Ricoh India Ltd
EGM
PVR Ltd
Results
GRUH Finance Ltd
சீன பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி ஏன்................
உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்குகிறது. எனினும், ஓரிரு ஆண்டுகளாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. கடந்த ஆண்டு, சீனாவின் உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதத்திற்கும் கீழாக சரிவடைந்துள்ளது. தேவை குறைந்து, தயாரிப்பு துறையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு, அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறையும் படுத்து விட்டது. இதனால், சில்லரை முதலீட்டாளர்களுக்கு, பங்குச் சந்தை உட்பட, மாற்று முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை சீனா எடுத்தது.
குறிப்பாக, உள்நாட்டு தேவையை அதிகரிக்க, பங்குச் சந்தை சார்ந்த வருவாய் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, பங்குச் சந்தைகளில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, பங்கு தரகர்களுக்கான கடன் வரம்பு உயர்த்தப்பட்டது. இதனால், ஏராளமான சில்லரை முதலீட்டாளர்கள், குறுகிய காலத்தில் லாபம் ஈட்டும் நோக்கில், கடன் வாங்கி பங்குகளில் முதலீடு செய்யத் துவங்கினர்.இதன் காரணமாக, கடந்த ஓராண்டில், சீன நிறுவன பங்குகளின் விலை, கிடு கிடுவென உயர்ந்தது. ஷாங்காய் பங்குச் சந்தையின் குறியீட்டு எண், கடந்த ஓராண்டில், 150 சதவீதம் அதிகரித்தது. இதே காலத்தில், சீன பங்குச் சந்தைகளின் மதிப்பு, ஐந்து மடங்கு அதிகரித்து, 32,200 கோடி டாலர் உயர்ந்தது.
இதையடுத்து, பங்குகளின் விலை, செயற்கையாக உயர்வதைத் தடுக்க, கடந்த ஜூன், 12ல், பங்கு தரகர்களுக்கான கடன் வரம்பு குறைக்கப்பட்டது.அது முதல், சீன பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன. பங்கு விலை வீழ்ச்சியால், வரம்புத் தொகை குறைவாக உள்ள முதலீட்டாளர்களின் பங்குகளை, தரகர்கள் தாமாகவே விற்பனை செய்யத் துவங்கினர். இது, பங்குச் சந்தை மேலும் சரிவடைய வழி வகுத்தது.இதைத் தடுக்க, காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு முதலீட்டு வரம்பை, 5 சவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக, சீன அரசு உயர்த்தியது.
மேலும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவன பங்குகளை வாங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பங்கு தரகர்களுக்கு, 4,300 கோடி டாலர் கடன் வழங்கப்பட்டது. இத்துடன், முதன் முறையாக, ஓய்வூதிய நிதியத்திற்கு, பங்குகளில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும், நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, வங்கிக் கடனுக்கான வட்டியும் குறைக்கப்பட்டது.இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தும், சீன பங்குச் சந்தை எழாமல், தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. சீன பங்குச் சந்தைகளில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு, 85 சதவீதமாக உள்ளது. அவர்கள் பீதியில், பங்குகளை விற்பனை செய்து வருவதால், கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில், முதலீட்டாளர்கள், 3 லட்சம் கோடி டாலர் அளவிலான முதலீட்டை இழந்துள்ளனர். இது, மொத்த பங்குச் சந்தை மதிப்பில், 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, இரண்டு நாள் தொடர் சரிவிற்குப் பின், நேற்று சீன பங்குச் சந்தைகள் சற்றே ஏற்றம் கண்டன.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.