14/7/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 75 புள்ளிகள் உயர்வுடன் 9891 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 20 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9911 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பங்கு வெளியீட்டில் ஆஸ்ட்ரன் பேப்பர்
குஜராத்தைச் சேர்ந்த ஆஸ்ட்ரன் பேப்பர் அண்ட் போர்டு மில் நிறுவனம், கிராப்ட் பேப்பர் எனப்படும் கார்ட்போர்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், புதிய தொழிற்சாலையை அமைக்கவும், பழைய கடன்களை திரும்பத் தரவும், நடைமுறை மூலதன தேவைகளுக்காகவும் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.இதற்காக, பங்கு வெளியீடு தொடர்பான ஆவணங்களை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் இந்நிறுவனம் வழங்கிஉள்ளது.ஒரு பங்கு, 10 ரூபாய் முக மதிப்பு வீதம், 1.40 கோடி பங்குகளை வெளியிட, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. செபியின் ஒப்புதலுக்கு பின், அடுத்த மூன்று மாதங்களில், இப்பங்கு வெளியீடு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இப்பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு, பான்டமத் கேப்பிடல் அட்வைசர்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பங்கு வெளியீட்டிற்கு பின், இந்நிறுவன பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.
9 ஆண்டு உச்சத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு 9 ஆண்டு உச்சத்தில் இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ புதிய கட்டண அறிவிப்பை அறிவித்ததை தொடர்ந்து இந்த ஏற்றத்தை அடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 1.02 சதவீதம் உயர்ந்து 1,510 ரூபாயில் முடிவடைந்தது. நேற்று வர்த்தகத்தின் இடையே 1.95 சதவீதம் வரை உயர்ந்து ரூ.1,525 வரை உயர்ந்தது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 5,018 கோடி உயர்ந்தது. நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.4.91 லட்சம் கோடியாக இருக்கிறது.
நடப்பாண்டில் சென்செக்ஸ் 19 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் பங்கு 41 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு ஒரு பங்கின் விலை ரூ.1,525 என்னும் விலையை தொட்டது. நிறுவனங்களின் சந்தை மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் டிசிஎஸ் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4.73 லட்சம் கோடி. அடுத்த இடங்களில் ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிசி, ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ ஆகியவை இருக்கின்றன.
9800-க்கு மேலே நிப்டி
தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து வருகின்றன. சென்செக்ஸ் 57 புள்ளிகள் உயர்ந்து 31804 புள்ளியிலும், நிப்டி 30 புள்ளிகள் உயர்ந்து 9816 புள்ளியிலும் முடிவடைந்தன. ஆயில் அண்ட் கேஸ் குறியீடு அதிகபட்சமாக உயர்ந்தது. ஐடி மற்றும் டெக்னாலஜி குறியீடு சரிந்து முடிவடைந்தது. சென்செக்ஸ் பங்குகளில் ஹெச்யுஎல், ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன
நிப்டி சப்போர்ட் 9864,9837
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9910,9924
14 JULY details
டிவிடெண்ட்
M&M FIN
HDFC
GIC HOUSING
GLAXO PHARMA
VIP IND
results
INFY
spilit
-----
BONUS
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 144000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM