** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 17 November 2015

17/11/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளன. வர்த்தக‌ வாரத்தின் துவக்கநாளான நேற்று பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமாகின. அக்டோபர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி சரிந்தது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கியபோதும், நேற்று அக்டோபர் மாத பணவீக்கம் வெளியானது. தொடர்ந்து 10 மாதங்களுக்கு மேலாக பணவீக்கம் சரிவுடன் இருப்பதுடன் பணவாட்டத்தில் இருப்பதாலும், இதன்காரணமாக முக்கிய நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியதால் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. இறுதியில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.. 
நேற்றைய நமது நிப்டி 44 புள்ளிகள் உயர்ந்து 7806 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 237 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 260 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 80 புள்ளிகள் உயர்வுடன் 7886 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கடந்த வாரத்தில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக முதல் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 94,561 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது. இதில் டிசிஎஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடுமையாக சரிந்தது.
பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிந்ததை அடுத்து சென்செக்ஸ் 26,000 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது குறிப்பிடத்தக்கது. டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.21,369 கோடி சரிந்து ரூ.4,72,370 கோடியாக இருக்கிறது.
அதேபோல ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மதிப்பு ரூ.19,763 கோடி, சன்பார்மா சந்தை மதிப்பு ரூ.14,907 கோடி, இன்போசிஸ் சந்தை மதிப்பு ரூ8,636 கோடி, ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு 7,486 கோடி ரூபாய் அளவில் சரிந்து முடிந்தது. இதேபோல ரிலையன்ஸ், ஐடிசி, ஹெச்டிஎப்சி, கோல் இந்தியா மற்றும் எஸ்பிஐ ஆகிய பங்குகளின் சந்தை மதிப்பும் சரிந்தன.
ரூ. 2,800 கோடி வெளியேற்றம்
கடந்த இரு வாரங்களாக இந்திய சந்தையில் இருந்து 2,800 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறி இருக் கிறது.
இதில் பங்குச்சந்தையில் இருந்து 2,505 கோடி ரூபாயும், கடன் சந்தையில் இருந்து 313 கோடி ரூபாயும் வெளியேறி இருக்கிறது.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் 22,350 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்தது.

நிப்டி சப்போர்ட் 7840,7780,7740
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7900,7940

பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் 
சொல்லலும் வல்லது அமைச்சு.
 உரை:
ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.
Translation:
A minister has power to see the methods help afford, 
To ponder long, then utter calm conclusive word.
Explanation:
The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).