13/09/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வுடன் முடிந்தன. மீண்டும் சென்செக்ஸ் 32 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளையும் கடந்தன.
ஆசிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், உள்நாட்டில் முதலீடுகள் அதிகரிப்பு, முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் போன்ற காரணங்களால் வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. அந்த ஏற்றம் நாள் முழுக்க நீடிக்க பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 87 புள்ளிகள் உயர்வுடன் 10093 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 61 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 10103 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டில்லியைச் சேர்ந்த, இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டிற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான, ‘செபி’ ஒப்புதல் அளித்து உள்ளது.
நாட்டின், முதல் மின் வணிக சந்தை என்ற சிறப்பை பெற்ற, இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச், 2008ல் துவக்கப்பட்டது. இந்நிறுவனத்தில், டாடா பவர், ஆதித்ய பிர்லா குழுமம், மாடிசன் இந்தியா கேப்பிட்டல் உள்ளிட்ட நிறுவனங்கள், பங்கு முதலீடு மேற்கொண்டு உள்ளன. புதிய பங்கு வெளியீட்டை, ஆக்சிஸ் கேப்பிட்டல், கோடக் மகிந்திரா கேப்பிட்டல், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் ஆகியவை நிர்வகிக்க உள்ளன. மொத்தம், 60 லட்சம் பங்குகள் விற்பனைக்கு வரும் என, தெரிகிறது. பங்கு விலை, வெளியீட்டு தேதி உள்ளிட்ட விபரங்கள், விரைவில் வெளியாகும்.
இந்தியாவில், 2012ல், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் நிறுவனம், முதன்முதலாக, பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. அதை தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை, பங்கு வெளியீடு மேற்கொண்டது. தேசிய பங்குச் சந்தை, பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி, ஏற்கனவே, ‘செபி’யிடம் விண்ணப்பித்து உள்ளது.
ஆர்.காம் நஷ்டம் ரூ.1,210 கோடி
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.1,210 கோடி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. கடனில் இருக்கும் இந்த நிறுவனம் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.90 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
கடந்த 20 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறை எதிர்மறை வளர்ச்சியை சந்திக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் தொலைத்தொடர்பு துறை கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. நிறுவனத்தின் மொத்த வருமானமும் 33 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.5,361 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.3,591 கோடியாக சரிந்திருக்கிறது. நிறுவனத்துக்கு சுமார் ரூ.45,000 கோடி கடன் இருக்கிறது
டாடா ஸ்டீல் நிகர லாபம் ரூ.921 கோடி
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் ரூ.921 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,183 கோடியாக நிறுவனத்தின் நஷ்டம் இருந்தது. நிறுவனம் லாப பாதைக்கு திரும்பி இருந்தாலும் சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் சராசரியாக ரூ.1,043 கோடி லாபம் இருக்கும் என வல்லுநர்கள் கணித்தனர் அதேபோல ஜூன் காலாண்டில் வருமானம் 19.30 சதவீதம் உயர்ந்து ரூ.30,973 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.25,970 கோடியாக வருமானம் இருந்தது.
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ்.
கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 400 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, கெப்பாசிட்டி இன்ப்ரா புராஜக்ட்ஸ் நிறுவனம், வீடு, வணிக வளாகம் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஜன., நிலவரப்படி, 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 51 கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்வு
கடந்த மூன்று ஆண்டுகளில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 72 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் சென்செக்ஸ் 34 சதவீதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. கடந்த மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் இந்த உயர்வு கணக்கிடப்பட்டிருக்கிறது.
ஓர் ஆண்டு காலத்திலும், சென்செக்ஸை விட ஸ்மால்கேப் குறியீடு அதிகளவு உயர்ந்திருக்கிறது. மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஓர் ஆண்டு காலத்தில் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 36.22 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மாறாக சென்செக்ஸ் 18.22 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 10048,10003
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10117,10144
13 sep details
divident
beml
cox&kings
nhpc
ptc
rcf
repco
relults
swan energy
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 156000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM