** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 14 April 2015

சிந்திக்க..........
“நீங்கள்தான் உலகிலேயே அழகானவர். அறிவுள்ளவர். அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர். உங்கள் திறமையில் எந்தச் சந்தேகமுமில்லை. நீங்கள் படிக்கின்ற பாடக் கல்வியில் தலை சிறந்தவர்.” என்று உறுதியாக நம்புங்கள்.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 422.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ 
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
உரை:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
Translation:
Wisdom restrains, nor suffers mind to wander where it would; 
From every evil calls it back, and guides in way of good.
Explanation:
Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.


Monday, 13 April 2015

13/4/2014..MCX CALLS UPDATE.

SELL NICKE 793 TGT 780 SL 802. (MADE LOW 778.20)

JOIN OUR TEAM 9842746626,9842799622.


சிந்திக்க.......
துயரம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இன்பத்தை யாராலும் ரசிக்க முடியாது.ஒரு மனிதன் மற்றொரு மனிதனை வாழ்வில் முந்திச் சென்றாலோ, வெற்றியைப் படைத்தாலோ அதற்குக் காரணம் விதியோ, அதிர்ஷ்டமோ அல்ல. அவனது உழைப்புத்தான் காரணம்.
13/04/2015...திங்கள்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வெள்ளியன்று சந்தை வர்த்தகநேர துவக்கத்தில் சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தக‌நேர இறுதியில், ஏற்ற, இறக்கத்துடன் முடிந்தது
நேற்றைய நமது நிப்டி 2 புள்ளிகள் உயர்ந்து 8780 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 98 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8790 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8760,8730,8700
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8790,8800,8820.
மார்ச் 2015 உடன் முடிந்த நிதி யாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட தயாராகி வருகின்றன இந்திய ஐடி நிறுவனங் கள்.
முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஏப்ரல் 24 ம் தேதி தனது காலாண்டு முடிவுகளை வெளி யிட உள்ளதாக அறிவித்துள்ளது. மற்றொரு முன்னணி நிறுவனமான டிசிஎஸ் தனது நான்காம் காலாண்டு முடிவுகளை ஏப்ரல் 16ம் தேதி அறிவிக்க உள்ளது.
ஏப்ரல் 24ம் தேதி இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் காலாண்டு முடிவு மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியிட உள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனம் ஏப்ரல் 21ல் தேதி தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது. இந்த நிறுவனம் 2014 ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் 29.8 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. அதுபோல டிசிஎஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமான வளர்ச்சி 31.2 சதவீதமாக இருந்தது.
விப்ரோ நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் தேதியை இன்னும் வெளியிடவில்லை.
14-Apr-2015Details
Board Meetings
ACC Ltd
DCB Bank Ltd
Results
ACC Ltd
DCB Bank Ltd
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்த பின்னரும், வங்கிகள் வட்டியை குறைக்கவில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியதை அடுத்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலில் வட்டி விகிதத்தை குறைத்தது.
இதை தொடர்ந்து ஹெச்.டி.எப்.சி. வங்கியும், ஐசிஐசிஐ வங்கியும் வட்டி விகிதங்களை குறைத்தன.
எஸ்.பி.ஐ. மற்றும் ஹெச்.டி.எப்.சி. ஆகிய வங்கிகள் அடிப்படை வட்டி விகிதத்தை 0.15 சதவிதம் வரை குறைத்தன. ஐசிஐசிஐ வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரை குறைத்தது.
எஸ்.பி.ஐ. மற்றும் ஹெச்.டி.எப்.சி வங்கிகளின் வட்டி குறைப்பு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும். ஐசிஐசிஐ வங்கியின் வட்டி குறைப்பு ஏப்ரல் 13-ம் தேதி வரை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் நடுத்தர கால டெபாசிட்களுக்கான (ஒரு கோடி ரூபாய் வரை) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்திருக்கின்றன.
நாட்டின் மூன்றாவது பெரிய தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியும் நேற்று வட்டி குறைத்தது. அடிப்படை வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் வரை குறைத்தது. இப்போது 9.95 சதவீதமாக இந்த வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் இருக்கிறது. இந்த வட்டி குறைப்பு ஏப்ரல் 13-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்திருக்கிறது.
அதேபோல அனைத்து வகையான டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.
முக்கிய வங்கிகள் வட்டி குறைப்பு செய்ததை அடுத்த மற்ற வங்கிகளும் வட்டி குறைப்பில் ஈடுபடலாம் என்று தெரிகிறது.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் 
உள்ளழிக்க லாகா அரண்.
 உரை:
பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.
Translation:
True wisdom wards off woes, A circling fortress high; 
Its inner strength man's eager foes Unshaken will defy.
Explanation:
Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.


Sunday, 12 April 2015

பங்குச்சந்தை அடிப்படை (Basics of Stock Market)

பங்குச்சந்தையை பற்றி பார்ப்பதற்கு முன், சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வோம்.

தனியார் நிறுவனம் என்றால் என்ன ? (Private Company)
கம்பனி என்றால் என்ன ? (Company)
சரி! வாங்க பங்குச்சந்தை பற்றி பார்ப்போம்

பங்கு என்றால் என்ன ? (What is meant by share ?)
பங்குச்சந்தை என்றால் என்ன ? (What is meant by Share Market)
பங்குச்சந்தையின் வகைகள் யாவை ? (Types of Share Market)
பங்குதாரர் என்றால் என்ன ? (Stock Holder)
பங்குத்தரகர் என்றால் என்ன ? (Stock Broker)
புல் மார்க்கெட் என்றால் என்ன? (What is meant by BULL market?)
பேர் மார்க்கெட் என்றால் என்ன? (What is meant by BEAR market?)
பங்குகளின் விலை மாறுபடுவதற்கு காரணம் என்ன? (Why does stock price varies?)

தனியார் நிறுவனம் என்றால் என்ன ? (Private Company)

ஒரு நிறுவனம் என்பது கீழ்கண்ட இரு வகைகளில் உருவாக்கப்படுகிறது,

தனியொருவர் மட்டும் முதல் போட்டு வியாபாரம் செய்தால் அது தனியார் வியாபாரம். (Private Business)
சில நபர்கள் கூட்டு சேர்ந்து முதல் போட்டு வியாபாரம் செய்தால், அது பங்கு நிறுவனம் எனப்படும். (ஆங்கிலத்தில் Partnership எனப்படும்)

கம்பனி என்றால் என்ன ? (What is meant by company?)

மேலே கூறப்பட்ட Partnership என்பது முகம் தெரிந்தவர்களை மட்டும் சேர்த்து இயங்கக்கூடியது. இவற்றுடன் முகம் தெரியாத பலரையும் சேர்த்து வியாபாரம் செய்வதற்காக உருவாக்கப்படுவதற்கு கம்பனி என்று பொருள்.


இந்த கம்பனிகள் ரெஜிஸ்டார் ஆப் கம்பனீஸ் (Registrar of Companies) என்னுமிடத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் அந்த கம்பனியின் கடன்களுக்கு அக்கம்பனியே பொறுப்பு, பங்குதார்கள் பொறுப்பல்ல. (பங்குதாரகள் என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது)

பங்கு என்றால் என்ன ? (What is meant by stock?)

மேலே கூறப்பட்ட கம்பனிகள், முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள்.

பங்குச்சந்தை என்றால் என்ன ? (What is meant by Stock Market?)

பொதுவாக பங்குகளை வாங்கி விற்குமிடமே (டிரேடிங்) பங்குச்சந்தை ஆகும். இங்கு சிறு முதலீட்டாளர்கள், தரகர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள், தரகர்கள் வரை பங்குபெறலாம்.

உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange) ஆகும். உலகளவில் நியூயார்க் பங்குச்சந்தை (New York Stock Exchange), லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் (Hong Kong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.

பங்குச்சந்தை இரண்டு வகைப்படும், அவை (Different types of stock market)

· முதன்மை பங்குச்சந்தை (Primary Market)

ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம் (Issuing first stocks to public) முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO – Initial Public Offer) என்று பொருள்.

· இரண்டாம் நிலை பங்குச்சந்தை – வெளிச்சந்தை (Secondary Market)

முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ வெளிச்சந்தையை அனுக வேண்டும். ஒரு கம்பனி ஐ.பி.ஓ (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Will be listed in stock market). அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்பு விலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம்.

பங்குதாரர் என்றால் என்ன ? (Share Holder)

பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (Face Value) நிர்னயம் செய்வார்கள். இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோ விலை கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார்.

பங்கு தரகர்கள் ? (Stock Brokers)

பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள் மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.