** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 26 April 2015

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே 
அற்றந் த்ரூஉம் பகை.
 உரை:
குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
Translation:
Freedom from faults is wealth; watch heedfully 
'Gainst these, for fault is fatal enmity.
Explanation:
Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

Saturday, 25 April 2015


அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!
இரத்தம் சுத்தமாகும் 
அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, இரத்தம் சுத்தமாகும்.
நோயெதிர்ப்பு சக்தி 
அன்னாசியில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும். இதனால் உடலில் நோய்களின் தாக்கம் குறையும்.
செரிமானம் 
செரிமான பிரச்சனை இருந்தால், ஒரு கப் அன்னாசிப் பழத்தை சாப்பிடுங்கள். இதனால் உடனே உங்கள் செரிமான பிரச்சனை நீங்கும்.
எலும்புகளை வலிமையடையும் 
அன்னாசிப்பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அவை எலும்புகளை வலிமையாக்குவதோடு, இணைப்புத் திசுக்களையும் வலிமையாக்கும். ஒரு கப் அன்னாசிப்பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான 73% மாங்கனீசு நிறைந்துள்ளது.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 433.
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் 
கொள்வர் பழிநாணு வார்.
உரை:
பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.
Translation:
Though small as millet-seed the fault men deem; 
As palm tree vast to those who fear disgrace 'twill seem.
Explanation:
Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.


Friday, 24 April 2015

வெற்றி நமதே !!!
கஜினி 17 முறை தோற்று 18வது முறை வென்றவர்.
எடிசன் 1000 முறை தோற்றவர் ,
இந்த உலகில் ஆஸ்கார், நோபல் இரண்டு விருதையும் வாங்கிய, மிக சிறந்த எழுத்தாளர், நாடக ஆசிரியரான பெர்னாட்ஷாவின் படைப்புகள் தொடர்ந்து 9 வருடங்கள், அனைத்து பிரபல பத்திரிகைகளாலும் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அதே பத்திரிகைகள். அவர் கேட்கும் பணத்தை கொடுக்க தயாராக இருந்தனர்.
நம்மில் பலரோ, சின்ன, சின்ன தோல்விகளுக்கே நாம் அலுத்து கொள்கிறோம், சலித்து கொள்கிறோம், வெறுத்து கொள்கிறோம்...
இந்த உலகத்தில் எனக்கு மட்டும் தான் கஷ்டம் இருக்கு இது அனைத்து முட்டாள்களும் சொல்லும் வசனம்.
எடிசன், லிங்கன், பெர்னாட்ஷா ரேஞ்ச்க்கு கூட யோசிக்க வேண்டாம். ஒரு எறும்பு, தேனி, சிலந்தி போன்ற சின்ன, சின்ன உயிரினங்களுக்கு உள்ள விடா முயற்சி, சுறு, சுறுப்பு கூட பல மனிதர்களுக்கு இல்லையே.
முடியும் வரை செய்வது முயற்சி அல்ல. மூச்சு உள்ளவரை செய்வதே முயற்சி.
விடாது முயலுங்கள், வெற்றி நமதே !!!
இரண்டு நாட்களுக்கு பிறகு தான் லாபம் கிடைத்தது.
இன்றைய லாபம் 4000.
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.7845046626


இனிய மாலை வணக்கம் நண்பர்களே...
பங்குசந்தையில் வணிகம் செய்வோர்க்கு
விடுமுறைதின வாழ்த்துக்கள்