** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 8 November 2016

8/11/2016... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 63 புள்ளிகள் உயர்வுடன் 8497 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 371 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8507 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
மாருதி நிகர லாபம் 60% உயர்வு
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் நிகர லாபம் 60 சதவீதம் உயர்ந்து ரூ.2,938 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.1,497 கோடி அளவுக்கு மட்டுமே நிகர லாபம் இருந்தது.
மொத்த வருமானம் 29.28 சதவீதம் உயர்ந்து ரூ.20,296 கோடி யாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.15,699 கோடியாக இருந்தது. இந்த காலாண்டில் 4,18,470 வாகனங்கள் விற்கப்பட்டிருக்கின்றன. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 18.40 சதவீத வளர்ச்சி ஆகும். பல வகைகளில் இந்த காலாண்டு மிக சிறப்பானது என நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்திருக்கிறார்.
இந்த காலாண்டில் 17 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்திருக்கிறோம். எங்களது முழு உற்பத்தி திறனுக்கும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இதர செலவுகள் குறைவு என்ப தால் கூடுதலாக உற்பத்தி செய்யும் ஒவ்வொரு காரும் நிறுவனத்துக்கு லாபமாகும் என்றும் பார்கவா தெரி வித்தார். நேற்று 0.15 சதவீதம் சரிந்து ரூ.5,860-யில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
இன்போசிஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 6.1 சதவீதம் உயர்ந்து ரூ.3,606 கோடியாக உள்ளது. அதே சமயத்தில் குறுகிய காலத் தில் நிச்சயமற்ற சூழல் இருக்கும் என்றும், இந்த ஆண்டில் வருமானம் குறையும் என்றும் இன்போசிஸ் கூறியிருக்கிறது. வருமானம் குறைவது குறித்து நடப்பாண்டில் இரண்டாவது முறையாக இன் போசிஸ் தெரிவித்திருப்பது குறிப் பிடத்தக்கது.
கேவிபி லாபம் 11.2% சரிவு
கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் 11.2 சதவீதம் சரிந்து ரூ.126 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.142 கோடியாக நிகர லாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் 2.6 சதவீதம் உயர்ந்து ரூ.1,610 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.1,570 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.96 சதவீதத்தில் இருந்து 2.29 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
அதேபோல நிகர வாராக்கடனும் 0.96 சதவீதத்தில் இருந்து 1.44 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வங்கியின் மொத்த வணிகம் ரூ.90,000 கோடியை எட்டி இருக் கிறது. டெபாசிட் ரூ.52,002 கோடி யாகவும், கடன் ரூ.39,537 கோடி யாகவும் இருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.39 சதவீதத் தில் இருந்து 3.61 சதவீதமாக உயர்ந் திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் நிகர லாபம் ரூ.272.66 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டி லும் ரூ.276.80 கோடியாக இருந் தது. நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 4.91 சதவீதம் சரிந்தது.
நிப்டி சப்போர்ட் 8470,8450
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8530,8560
8 NOV details
DIVIDENTS
colgate
mrf
sriram
pi ind
dcm
result
ashok ley
bhel
bbtc
bomdying
tata comm
bharat forge
repco
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 986
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி 
துலையல்லார் கண்ணும் கொளல்.
 உரை:
சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்.
Translation:
What is perfection's test? The equal mind. 
To bear repulse from even meaner men resigned.
Explanation:
The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.


Monday, 7 November 2016

7/11/2016... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 50 புள்ளிகள் சரிவுடன் 8433 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 42 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 80 புள்ளிகள் உயர்வுடன் 8513 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 11.5% சரிவு
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 11.5 சதவீதம் சரிந்து ரூ.549 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.621 கோடியாக இருந்தது. அதே சமயத்தில் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.13,701 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.14,218 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை 34.6 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.1,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இப்போது ரூ. 2,533 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 13.63 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் மொத்த வாராக்கடன் 6.36 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடன் 3.99 சதவீதத்தில் இருந்து 9.10 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
தேனா வங்கி நிகர நஷ்டம் ரூ.44 கோடி
பொதுத்துறை வங்கியான தேனா வங்கியின் நிகர நஷ்டம் ரூ.44 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.38.70 கோடியாக நிகர லாபம் இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.2,872 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.2,914 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 6.89 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 13.79 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 4.65 சதவீதத்தில் இருந்து 8.93 சதவீதமாக அதிகரித்திருக்கிறது
ரிலையன்ஸ் மொத்த நிகர லாபம் ரூ.7,833 கோடி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 18 சதவீதம் அதிகரித்து ரூ.7,704 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.6,534 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் மொத்த நிகர லாபம் 24 சதவீதம் சரிந்து ரூ.7,833 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.10,314 கோடியாக இருந்தது.
மொத்த வருமானம் ரூ. 66,198 கோடியில் இருந்து ரூ.66,624 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணையை சுத்திகரிப்பு செய்வதற்கு கிடைக்கும் தொகை 10.10 டாலராக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 10.60 டாலர் கிடைத்தது. கடந்த ஜூன் காலாண்டில் ஒரு பேரல் சுத்திகரிப்பதற்கு 11.5 டாலர் கிடைத்தது.
நிறுவனத்தின் வசம் 1,240 கோடி டாலர் ரொக்கம் இருக்கிறது. நிறுவனத்தின் கடன் 2,840 கோடி டாலராகும்.
யெஸ் வங்கி நிகர லாபம் 31% உயர்வு
தனியார் வங்கியான யெஸ் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 31.30 சதவீதம் உயர்ந்து ரூ.801.50 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.610.40 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் ரூ.3,995 கோடியில் இருந்து ரூ.4,982 கோடியாக உயர்ந்திருக்கிறது.
அதேபோல வாராக்கடன் அள வும் உயர்ந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.61 சதவீதத் தில் இருந்து 0.83 சதவீதமாக அதிக ரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.20 சதவீதத்தில் இருந்து 0.29 சதவீதமாக அதிகரித் திருக்கிறது. வாராக் கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையும் ரூ.103 கோடியில் இருந்து ரூ.161 கோடியாக அதிகரித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8445,8385,8345
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8550,8600
7 nov details
divident
vedl
ajantha pharma
supreme ind
result
aban
britaniya ind
ceat
icici bank

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 985
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் 
மாற்றாரை மாற்றும் படை.
 உரை:
ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.
Translation:
Submission is the might of men of mighty acts; the sage 
With that same weapon stills his foeman's rage.
Explanation:
Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes.


Sunday, 6 November 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை 
சொல்லா நலத்தது சால்பு.
 உரை:
உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.
Translation:
The type of 'penitence' is virtuous good that nothing slays; 
To speak no ill of other men is perfect virtue's praise.
Explanation:
Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.



Saturday, 5 November 2016

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 983
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு 
ஐந்துசால் ஊன்றிய தூண்.
 உரை:
அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.
Translation:
Love, modesty, beneficence, benignant grace, 
With truth, are pillars five of perfect virtue's resting-place.
Explanation:
Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.



Friday, 4 November 2016

4/11/2016... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 29 புள்ளிகள் சரிந்து 8484 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 29 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8494 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 82 சதவீதம் உயர்ந்து ரூ. 77 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.42 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் 11 சதவீதம் உயர்ந்து ரூ.738 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.660 கோடியாக இருந்தது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் 89 சதவீதம் உயர்ந்து ரூ.152 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ.80.67 கோடியாக இருந்தது. அதேபோல முதல் அரையாண்டில் வருமானமும் ரூ.1,292 கோடியில் இருந்து ரூ.1,451 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 1.70 ரூபாய் வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
நேற்று பங்குச்சந்தை சரிந்த போதிலும் இந்த பங்கு 4.5 சதவீதம் உயர்ந்து முடிந்தது. வர்த்தகத்தின் இடையே 9 சதவீதம் உயர்ந்து தன்னுடைய 52 வார உயர்ந்த பட்ச விலையான 355 ரூபாயை தொட்டது.
ஹெச்யுஎல் நிகர லாபம் 11.5% உயர்வு
எப்எம்சிஜி துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) நிறுவனத்தின் நிகர லாபம் 11.5 சதவீதம் உயர்ந்து ரூ.1,095 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் ரூ.982 கோடியாக இருந்தது.
மொத்த வருமானம் 1.57 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.8,348 கோடியாக இருந்தது. இப்போது ரூ.8,480 கோடியாக உயர்ந்திருக்கிறது. சவாலான சந்தையிலும் கூட நிறுவனம் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக தலைவர் ஹரீஷ் மன்வாணி தெரிவித்தார்.
பருவமழை சிறப்பாக இருக் கும் என்ற எதிர்பார்ப்பு இருப்ப தால், விற்பனையில் முன்னேற்றம் இருக்கும் என நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பிபி பாலாஜி தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் 10.6 சதவீதம் உயர்ந்து ரூ.2,269 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.2,051 கோடியாக இருந்தது. மேலும் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.7 வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
இண்டஸ்இந்த் வங்கி
தனியார் துறை வங்கியான இண்டஸ்இந்த் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 25.75 சதவீதம் உயர்ந்து ரூ.704 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.560 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,439 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.3,581 கோடி யாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.77 சதவீதத்தில் இருந்து 0.90 சதவீதமாக அதிகரித் திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.31 சதவீதத்தில் இருந்து 0.37 சதவீதமாக அதிகரித்தது.
வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.214 கோடி யாக அதிகரித்திருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 25.85 சதவீதம் உயர்ந்து ரூ.1,365.64 கோடியாக இருக்கிறது
நிப்டி சப்போர்ட் 8466,8433
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8523,8566
4 nov details
டிவிடெண்ட்
hexaware
hindzinc
results
albk
central bk
gati
titan
union bk
ubl
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM