** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 1 September 2014

1/9/2014   நிப்டி நிலைகள்.....

இன்று  மாதத்தின் முதல்நாள்..பியூச்சர் & ஆப்சன்ஷ் வர்த்தகத்திலும் முதல்நாள்.மூன்று நாள் விடுமுறைக்கு பின் பங்குசந்தை இன்று ஓப்பன் ஆகிறது. ஆசிய மற்றும் அமெரிக்க சந்தைகளின் உயர்வால் நமது சந்தை கேப் அப் மட்டுமல்லாது அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த,வரலாற்று சிறப்புமிக்க 8000 புள்ளிகளை தொடும் நாள் இன்று...
இந்த வரலாற்று சிறப்புமிக்க நன்னாளில் நமது வர்த்தகமும் வெற்றியுடன் தொடங்கிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகொண்டு ஆரம்பிப்போம்.

 Nasdaq 1004,082.564,082.97+16.29+0.40%
 FTSE 1006,819.756,828.92+13.95+0.20%
 S&P 5002,003.362,003.38+6.62+0.33%
 CAC 404,381.044,393.60+15.00+0.34%
 Dow 3017,098.4517,110.42+18.88+0.11%
 DAX9,470.179,517.95+7.61+0.08%
 Hang Seng24,848.0024,909.00+105.94+0.43%

இதே வேளையி நாம் ஒன்றை கவனித்தாகவேண்டும்.நிப்டி தொடர்ந்து உயர்ந்துகொண்டு வருகிறது.ஒரு கரெக்சன் வரும்,வரவேண்டும்..அப்போது மீண்டும் மேலே ஏற ஏதுவாகும். ஒரு மேடு இருந்தால் பள்ளம் ஒன்று இருக்கும்.ஆதலால கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டும்.
இன்றைய டேடா என்று பார்த்தோமானால் ஜெர்மனியின் ஜி டி பி வெளிவருகிறது அடுத்து இங்கிலாந்தின் பி எம் ஐ உற்பத்திகுறியீடு மற்றும் மணி சப்ளை..இதன் டேடாக்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையை பாதிக்ககூடியது..தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்னும் பழமொழிக்கேற்ப அங்கு (அமெரிக்க சந்தை) சரிந்தால் இங்கும் (இந்தியசந்தை)சரியும் என்பதை கவனத்தில்கொள்க..

நிப்டி ரெசிடென்ஷ்   7999,8049

நிப்டி சப்போர்ட்   7969,7911...


நீண்ட கால முதலீட்டாளர்கள் பெல் பங்கினில் முதலீடு செய்யலாம்.