நம் வெற்றிகளைப் பாதிக்கின்ற விஷயங்கள்.........
மன உளைச்சலால் அமைதியின்மை.
கடந்த காலத்தின் கசப்பான நினைவுகளை சுமந்து கொண்டேயிருத்தல்.
சுயநலத்தை மட்டுமே எண்ணி பிறருக்கு உதவாமை.
குறுகிய கண்ணோட்டத்தால் புதிய வாய்ப்புகளை இழத்தல்.
மிகச் சிறிய பிரச்சனைகளையும் பெரிதாக்கிப் பார்த்தல்.
பணம் மட்டுமே பெரிது என்ற வகையில் பண்புகளைத் தவறுதல்.
நல்ல அம்சங்களை மறந்து விடுதல்.
பிறர் ஏதாவது விமர்சித்தால் உடனே மனமுடைதல்.
வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை ஏற்காமை.
புதுமையாக செயல்படாமல், விருப்பமில்லாத வேலையை செய்து கொண்டிருத்தல்.
எல்லா நேரங்களிலும் எதாவது ஒரு கவலையை சுமந்து கொள்ளுதல்.
ஏதாவது ஒன்றுடன் தம்மை ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளுதல். ( பிற மனிதர்களுடைய பதவி, பணம், புகழ்)
மேலே கூறப்பட்ட காரணங்களை தவிர்த்தால் வெற்றி உங்கள் வசமாகும்..