** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 23 October 2014

23/10/2014  வியாழன் நிப்டி நிலைகள்......முகூரட் டிரேடிங்

நேற்றைய நமது நிப்டி தொடர்ந்து நான்காவது நாளாக 68 புள்ளிகள் உயர்வுடன் 7995 என்னும் புள்ளியில் நிறைவடைந்தது.நேற்றைய நமது பதிவில் குறிப்பிட்டபடி நிப்டி மிகசரியாக 70 புள்ளிகள் உயர்வுடன் 7997 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகியது (பார்க்க..22/10/2014 நிப்டி நிலைகள்)
 எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி தொடர்பான தொழிலில் மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை காரணமாக அதன்மீதான எதிர்பார்ப்பால் அந்த துறைகளை சார்ந்த பங்குகள் உயரத் தொடங்கின. மேலும் பண்டிகை காலம் என்பதாலும் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கினர். இதன்காரணமாக நேற்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பித்து, உயர்வுடனேயே முடிந்தன. 
 உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்து வருவதால் நடப்பு கணக்கு பற்றாகுறை குறையும். இந்தியாவில் அதிகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் முக்கிய இடத்தை வகிப்பது கச்சா எண்ணெய்தான். இதன் விலை சரிந்து வருவதால், ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறையும் போது பணவீக்க விகிதமும் குறையும். அதோடு மட்டும் இல்லாமல் 2014 செப்டம்பர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 2.38 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவாகும். அதேபோல  நுகர்வோர் பணவீக்க விகிதமும் 6.46 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான அடையாளம் ஆகும்.
அதாவது தொடர்ந்து  பணவீக்க விகிதம் குறைந்து வந்தால் அடுத்த ஆண்டு  ஆர்பிஐ வட்டிவிகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் குறைந்தால் கடனுக்கான வளர்ச்சி அதிகரித்து தொழில் துறைகளின் உற்பத்தி பெருகும். இதன் விளைவாக வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். இத்தனை சாதாகமான அறிகுறிகள் இருப்பதால் சந்தை ஏற்றத்திலே இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இன்றைய நமது நிப்டியும் 25 புள்ளிகள் உயர்வுடன் 8020 என்னும் புள்ளியில் ஓப்பன்  ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
இன்றைய முக்கிய டேடாக்கள்.
1.அமெரிக்காவின் வேலையற்றோர் விபரம்.
2.தொழில்துறை உற்பத்தி குறியீடு
3.வீடு விற்பனை பற்றிய டெடா.
நாளைய முக்கிய டேடாக்கள்
1.அமெரிக்காவின் நுகர்வோர் பயன்பாட்டு விபரம் பற்றிய அறிவிப்புகள்
இன்றைய நிப்டி ரெசிடென்ஷ் 8022,8049
                       நிப்டி சப்போர்ட்      7990,7970

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கெய்ரன் இந்தியா பங்கில் 274 என்னும் விலையில் வாங்க சொல்லியிருந்தோம் நேற்று இந்த பங்கானது 289 விலை வரை சென்றுள்ளது லாபங்களை புக் செய்து கொள்ளுங்கள் .
இன்றைய முஹூரட் டெரேடிங்கில் ஐடிசி என்னும் பங்கை 349 என்னும் விலையில் வாங்கவும்.

முகூரட் டிரேடிங் என்றால் என்ன?
முகூர்த் டிரேங்க் என்பது தீபாவளியன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு முதலீடு மற்றும் வர்த்தக நாள். முகூர்த் டிரேடிங் அன்று வர்த்தகம் நன்றாக இருந்தால் வருடம் முழுக்க வர்த்தகம் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை.
சில எக்ஸ்சேஞ்சுகள் மற்றும் பங்கு வர்த்தக புரோக்கர் அலுவலகங்களில் இது பெரும் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. தீபாவளியைப் போலவே பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது. மேலும், குஜராத் மாநிலத்தில் அன்றுதான் வருடப் பிறப்பானதால், அன்றுதான் அவர்கள் வருடத்தின் புதுக் கணக்குகளை தொடங்குவார்கள். முகூர்த் டிரேடிங் அன்று அதிக எண்ணிக்கையில் பங்குகள் வர்த்தகமாவதில்லை என்றாலும், சாஸ்திரத்துக்கு வாங்க வேண்டும் என்பது நம்பிக்கை. இதுவரை கொண்டாடப்பட்ட முகூர்த் டிரேடிங்கில், கடந்த 10 வருடத்தில் இரண்டுமுறை மட்டுமே வர்த்தகம் மைனஸில் முடிந்திருக்கிறது.
Muhurth trading from 6.30PM to 7.30PM on 23rd October 2014
நாளை விடுமுறை தினமாகும்.மீண்டும் பங்குசந்தை திங்கள் அன்று ஆரம்பிக்கும்.

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622