** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 12 November 2014

12/11/2014...புதன்..நிப்டிநிலைகள்.http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நிப்டி 18 புள்ளிகள் உயர்வுடன் 8362 என்னும் புள்ளியில் நிலை கொண்டது.நேற்றைய சந்தையில் வர்த்தகர்கள் ரியல் எஸ்டேட், வங்கி மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்தனர்.
நேற்றைய அமெரிக்க சந்தையானது எந்த வித மாற்றமின்றி முடிந்தது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் சிறிய ஏற்றத்தில் நடந்து வருகிறது.நமது சந்தையும் 15 புள்ளிகள் உயர்வுடன் 8377 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.தற்போதைய நிலையில் இன்று புதிய உச்சபட்ச விலையை உண்டாக்கும்.
இன்று வெளியாகும் இன்ப்ளேசன் டேடா சந்தையை வழிநடத்தும்.மற்றும் மெனுபேக்சரிங் புரடக்சன்,இண்டஷ்ட்ரியல் புரக்டசன் டேடா வெளிவருகிறது.
சீனாவின் தொழொல்துறை உற்பத்தி மற்றும் இங்கிலாந்தின் தொழிலாளர் சந்தை அறிக்கை பற்றிய டேடாக்கள் வெளிவருகிறது.மொத்தத்தில் இன்று வர்த்தகம் முழுதும் டேடாக்களின் அடிப்படையில் நகரும்.

நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8388,8411
நிப்டி  சப்போர்ட்           8355,8333,8299

பாரத் போர்ஜ் லாபம் 81% உயர்வு

ஆட்டோமொபைல்ஸ் துறைக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனமான போர்ஜ் இந்தியாவின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 81% உயர்ந்து ரூ.174 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிறுவனத்தின் ரூ96 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் நிகர விற்பனையும் 34% உயர்ந்து ரூ.1,138 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 845 கோடி ரூபாயாக இருந்தது. இரண்டாம் காலாண்டு நிகர லாபம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருக்கிறது குறிப்பாக வட அமெரிக்க சந்தையில் சிறப்பாக இருக்கிறது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாபா கல்யாணி தெரிவித்தார்.

அதானி போர்ட்ஸ் லாபம் ரூ. 573 கோடி

அதானி போர்ட்ஸ் மற்றும் எஸ்.இ.இசட் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 68% உயர்ந்து 573 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.341 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த வருமானம் 1,149 கோடி ரூபாயிலிருந்து 1655 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

அதானி பவர்

அதானி குழுமத்தை சேர்ந்த அதானி பவர் நிறுவனம் செபடம்பர் காலாண்டில் 799 கோடி ரூபாய் நஷ்டமடைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 1,072 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனத்தின் நஷ்டம் இருந்தது. அதே சமயம் மொத்த வருமானம் 36 சதவீதம் உயர்ந்து.

தேனா வங்கி லாபம் சரிவு

தேனா வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் பாதியாக சரிந்து 52 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகரலாபம் 107 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ. 2,599 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ. 2,855 கோடியாக உயர்ந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 3 சதவீதத்திலிருந்து இப்போது 5.12% உயர்ந்திருக்கிறது.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.



 Dow 30 17,614.90 17,638.21 +1.16 +0.01%

 Nasdaq 100 4,187.16 4,187.31 +11.22 +0.27%
 S&P 500 2,039.68 2,041.28 +1.42 +0.07%
 FTSE 100 6,627.40 6,632.57 +16.15 +0.24%
 CAC 40 4,244.10 4,252.92 +21.28 +0.50%
 DAX 9,369.03 9,400.90 +17.16 +0.18%
 Hang Seng 23,851.00 23,874.00 +42.72 +0.18%