மன அழுத்த பிரச்சினைக்கு முக்கியமான காரணமாக diversion இல்லாததைச் சொல்கிறார்கள். ஒன்றையே திரும்பத் திரும்ப நினைத்து வெதும்புவது. ஒரு பிரச்சினை வந்தால் அதைவிட்டுவிட்டு வேறு ஏதேனும் ஒன்றில் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஆனால் அது எவ்வளவு பேருக்கு சாத்தியமாகிறது என்பதுதான் கேள்வி. முன்பெல்லாம் ஒரு பிரச்சினை என்றால் பரிகாரம் என்ற பெயரில் கோவிலுக்குச் சென்று வரச் சொல்வது கூட இப்படியானதொரு கவனத் திருப்பல்தான். ஆனால் இப்பொழுது நம்மால் ஒரு பிரச்சினையிலிருந்து நம் கவனத்தை திசை திருப்பவே முடிவதில்லை. அப்படியே பரிகாரம் தேடி கோவிலுக்குச் சென்றாலும் கூட மொபைல் ஃபோன் ஒட்டிக் கொண்டேயிருக்கிறது. எங்கே போய் திசை திருப்புவது?