** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 17 January 2015

சாதனையாளர்கள் பற்றிய ஓர் பார்வை.
கைகளும் இல்லை, கால்களும் இல்லை, கவலையும் இல்லை .
http://panguvarthagaulagam.blogspot.in/
இரண்டு கைகளும் இல்லாமல், இரண்டு கால்களும் இல்லாமல் வாழ முடியுமா ??
எப்படிச் சாத்தியமாகும் ??
முடியும் என்கிறார்
Nick Vujicic.
பெயர் நிக். இருபத்தெட்டு வயது. நிக்கிற்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை!
1982-ம் வருடம் ஆஸ்திரேலியாவில் நிக் பிறந்தபோதே அவருக்குக் கைகள், கால்கள் இல்லை. வெறும் உடம்பு மட்டும்தான்.
நிக்கின் பெற்றோர் துடித்துப்போனார்கள். “உடம்பில் ஒரு சின்ன ஊனம் உள்ளவர்கள்கூட இயல்பாக வாழமுடியாமல் சிரமப்படுவதைப் பார்க்கிறோம், இந்தப் பிள்ளை கையும் காலும் இல்லாமல் எப்படி வளரப்போகிறது? கடவுளே!’
ஆனால் பெற்றோர் அவனை நல்லவிதமாக வளர்க்க முடிவு செய்தார்கள். ஊனமுற்றோர் பள்ளியில் சேர்க்காமல், வழக்கமான பள்ளியில் சேர்த்தார்கள். அப்படி சேர்ப்பதற்கே நிறைய போராட வேண்டியதாயிருந்தது. ஆனால் பள்ளியில் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளானான் சிறுவன் நிக். இந்த கேலியைப் பார்த்த சிறுவன் நிக் தற்கொலை செய்ய முடிவு செய்தான்.
நல்லவேளையாக, நிக் தற்கொலை செய்துகொள்ளவில்லை. “எனக்காக இவ்ளோ கஷ்டப்பட்ட எங்க அம்மா, அப்பாவை நினைச்சுப் பார்த்தேன். சாகறதுக்கு மனசு வரலை!’
அதன்பிறகு, நிக் நிறையப் படிக்க ஆரம்பித்தார். அவரைப்போலவே உடல் குறைபாடுகளால் அவதிப்பட்டவர்கள், அதைத் தைரியமாக எதிர்த்து நின்று ஜெயித்தவர்களைப் பற்றியெல்லாம் வசித்து, கேட்டுத் தெரிந்துகொண்டார்.
நிக் தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பணிகளையும் வேறொருரின் உதவியின்றி தானாகவே செய்ய பழகிக்கொண்டார். குறிப்பாக தானாகவே எழுதுவதற்கு முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்.கணனியில் வேலைகளை செய்வது, டென்னிஸ் பந்துகளை தூக்கி எறிவது, ட்ரம்ஸ் இசைக்கருவியை வாசிப்பது, தலை வாரிக்கொள்வது, பல் துலக்குதல், முகச்சவரம் செய்தல், தொலைபேசியை உபயோகிப்பது போன்ற அனைத்து வேலைகளையும் தனியாக செய்ய தன்னை தயார்படுத்திக்கொண்டார்.
இவரின் லைஃப் வித்அவுட் லிமிட்ஸ் (Life Without Limits) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் இளைஞர்களுக்காக No arms,No legs,No worries என்ற தலைப்பில் தனது பேச்சு பற்றிய குறுந்தகடை வெளியிட்டுள்ளார். இவரின் தன்னம்பிக்கையும் விடமுயற்சியுமே இவரை இந்த அளவிற்கு கொண்டுவந்துள்ளது என்றால் அது மிகையல்ல.