** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 10 January 2015

PIVOT - RESISTANCE - SUPPORT
பிவோட் - ரெஸிஸ்டன்ஸ் - சப்போர்ட் ...
வணிக உலகில் அன்றுமுதல் இன்றுவரை சந்தை மேலே சென்றால் எதுவரை செல்லும்?
கீழே இறங்கினால் எது வரை இறங்கும்?
பெரிய கேள்வி இருந்து வருகிறது... அந்தக்கேள்விக்கு பதிலாக இருப்பது அன்றுமுதல் இன்றுவரை பெரும்பான்மையானவர்கள் பயன்படுத்தும் ஒரு யுத்தியே பிவோட் பாய்ண்ட் யுத்தி...
இது பல முறைகளில் பயன்படுத்தப்படுகிறது... என் அனுபவத்தில் நம் பங்குச்சந்தை பொருள் சந்தையிலும் உலக ஃபாரெக்ஸ் சந்தைகளிலும் வணிகத்தில் பெரும் வெற்றியைத்தருவதாக இருக்கிறது ...
இதை வணிகத்தில் எப்படிப்பயன்படுத்துவது என்று பல முறைகள் உள்ளது...
அது நாம் செய்யும் வணிகமுறைகளைப்பொருத்து மாறுபடும்..
அந்த பிவோட் பாய்ண்ட் எப்படிக்கண்டுபிடிப்பது?
அதற்கும் மென்பொருள் நிறைய இணையதளங்களில் இருக்கிறது..
அதை எப்படி கணக்கிடுவது ?
பிவோட் அளவீடுகளைக் கணக்கிடுவது எப்படி?
Pivot Point = (Previous High + Previous Low + Previous Close) / 3
முந்தையநாளின்[மேல்விலை + கீழ்விலை + முடிந்தவிலை]மூன்றையும் கூட்டி மூன்றால் வகுக்க வரும் ஈவு தொகையே பிவோட் எண் ஆகும்...
உதாரணமாக
மேல்விலை High 100
கீழ்விலை Low 50
முடிவுவிலை Close 75
[H100 + L 50 + C 75] = 225 / 3 = 75
பிவோட் எண் 75
ரெஸிஸ்டன்ஸ் - சப்போர்ட் கண்டுபிடிப்பது எப்படி?
ரெசிஸ்டன்ஸ்1
பிவோட் எண்ணிலிருந்து கீழ்விலையக்கழிக்க வரும் எண்ணுடன் பிவோட் எண்ணைக்கூட்டினால் வருவதே R1.
[P75 – L 50] = 25 + [P] 75 = R1 100
சப்போர்ட் 1
( [H]100 – [P]75 ]  25 – [P] 75 = [S1] 5O
மேல்விலையிலிருந்து பிவோட்டைக்கழிக்க வரும் தொகையை பிவோட்டால் கழிக்க வருவதே S1 ஆகும்...
ரெசிஸ்டன்ஸ் 2
[H]100 – [L]50 = 50 + [P] 75 = 2 125
மேல்விலையிலிருந்து கீழ்விலையைக்கழிக்க வரும் தொகையுடன் பிவோட்டைக்கூட்ட வருவதே R2
சப்போர்ட் 2
[H]100 – [L] 50 = 50 [P] 75 – 50 = 25 S2
மேல்விலையிலிருந்து கீழ்விலையைக்கழிக்க வரும் எண்ணுடன் பிவோட்டைக்கழிக்க வருவது S2
ரெசிஸ்டன்ஸ் 3
[R1]100 - [L] 50 = 50 + [H] 100 = 150 R3
ரெசிஸ்டன்ஸ் 1 லிருந்து கீழ்விலையக்கழிக்கவரும் எண்ணுடன் மேல்விலையைக்கூட்டினால் வருவது R3
சப்போர்ட் 3
[S1] 50 – [H] 100 = -50 + [L] 50 = 0 [S3]
சப்போர்ட் 1 லிருந்து மேல் விலையைக்கழிக்க வரும் எண்ணுடன் கீழ்விலையக்கூட்டினால் வருவது S3 ஆகும்...
உலக அளவில் நுட்பவியளாளர்கள் அனைவராலும் பின்பற்றப்படும் தவிர்க்கவே முடியாத ஓர் உன்னதமான யுத்தி...... பயன்படுத்திப்பாருங்கள்......