2/2/2015....திங்கள்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
வெள்ளியன்று நமது நிப்டி143 புள்ளிகள் சரிந்து 8808 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.வெள்ளியன்று அமெரிக்க சந்தைகள் 251 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்றும் நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8788 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
கடந்த பத்து வர்த்தக நாட்களாக ஏற்றத்தில் இருந்த சந்தை கடுமையான சரிவை சந்தித்தது.தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 9000 புள்ளிகளை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சந்தை இறக்கத்தை சந்தித்தது.
ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா வின் காலாண்டு முடிவுகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்கின்றனர் சந்தை நிபுணர்கள். ஐசிஐசிஐ வங்கியின் நிகர வாராக்கடன் அதிகரிப்பு, மற்றும் பேங்க் ஆப் பரோடாவின் வருமானம் குறைந்தது ஆகிய காரணங்களால் இந்த இரண்டு பங்குகள் கடுமையாக சரிந்தன. ஐசிஐசிஐ பங்கு 5.2 சதவீதமும், பேங்க் ஆப் பரோடா 11 சதவீதம் சரிந்து முடிந்தன.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.86 ரூபாயாக இருந்தது.
ரிசர்வ் வங்கி, நாளை வெளியிட உள்ள நிதி சீராய்வு கொள்கையில், மீண்டும் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம், யாரும் எதிர்பாராத வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 7.75 சதவீதமாக நிர்ணயித்தது. அதுபோல், வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் பெறும் கடனுக்கான, 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம், சில்லரை பணவீக்கம், 5 சதவீதமாகவும், மொத்த விலை பணவீக்கம், 0.1 சதவீதமாகவும் குறைந்தது. இது மட்டுமின்றி, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையால், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை சமாளிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.22,500 கோடி:சில தினங்களுக்கு முன், கோல் இந்தியாவின், 10 சதவீத பங்கு விற்பனை மூலம், மத்திய அரசுக்கு, 22,500 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதுதவிர, ஏற்கனவே செயில் நிறுவன பங்கு விற்பனை மூலம், 1,719 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மார்ச்சுக்குள், மேலும் பல பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நடைபெற உள்ளது. இதனால், பங்கு விற்பனைக்கு நிர்ணயிக்கப்பட்ட, 43,425 கோடி ரூபாய் என்ற இலக்கை, மத்திய அரசு உயர்த்தும் என தெரிகிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், நாட்டின் நடப்பு கணக்கு, பற்றாக்குறை என்ற நிலையில் இருந்து, உபரியாக வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
எதிர்பார்ப்பு:மேற்கண்ட காரணங்களால், ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' வட்டி விகிதங்களை, மேலும் 0.25 சதவீதம் அளவுக்கு குறைக்கும் என, தெரிகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இவ்வாண்டில், மொத்தம் ஒரு சதவீதம் வட்டி குறைப்பு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக, வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் தாக்கத்தால், வாகனம், வீடு உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறையும். அதே சமயம், டிபாசிட்டுகளுக்கான வட்டியும் குறையும்.
நிப்டி சப்போர்ட் 8777,8722,8633
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8866,8944,8999
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.
Results
Advanta Ltd
Bayer CropScience Ltd
Bharat Forge Ltd
Cera Sanitaryware Ltd
Cummins India Ltd
GIC Housing Finance Ltd
Indian Bank
JSW Energy Ltd
Lakshmi Machine Works Ltd
Redington India Ltd
Religare Enterprises Ltd
Repco Home Finance Ltd
Strides Arcolab Ltd
UPL Ltd
Ybrant Digital Ltd