** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 16 May 2015

டாஸ்மாக்........மது என்னும் அரக்கன்.
இன்று குக்கிராமங்களில் கூட டாஸ்மாக் இருக்கிறது.
தான் சம்பாதிக்கும் சிறு தொகையையும், அல்லது மனைவியின் சம்பாத்தியத்தையும் அவளைத் துன்புறுத்திப் பிடுங்கி வந்து, டாஸ்மாக் கடையில் தாரைவார்த்துவிட்டு, ‘தான் எங்கிருக்கிறோம், என்ன நிலையில் இருக்கிறோம்' என்ற சுய நினைவில்லாமலே சாலையோரம் அலங்கோலமான நிலையில் கிடக்கும் பலரைத் தமிழகமெங்கும் தினமும் காணலாம்.
மதுவை விற்றால் வருமானம் வரும்தான்; அதனால், உடலும் சமுதாயமும் எவ்வளவு சீர்கெடுகிறது? கண்ணைத் திறந்துகொண்டு யாராவது கிணற்றில் விழுவார்களா? ‘வருமானம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமூகத்தையும் மதுவெனும் பாதாளத்தில் தள்ளி மூழ்கடிக்கும் நிர்வாகப் போதைக்கு என்ன தண்டனை?'